பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


களில் நாலைந்து நாட்கள் வெள்ளம் கரை புரண்டு ஒடும். மீண்டும் பழைய குருடிதான். அதற்குப் பின் ஊற்று நீரில்தான் குளிக்க வேண்டும்.

நான் எந்தப் பாடத்தையும் மிக விரைவில் நெட்டுருப் போட்டுவிடுவேன். அதனுல் பாடத்திற்காக ஆசிரியர் சுவாமி களிடம் நான் அடிவாங்கியதே இல்லை. சட்டாம்பிள்ளையும் எனக்கு அன்போடு நடிப்புச் சொல்லித் தருவார். ஆனால், மற்ற வர்கள் பாடம் செய்யாமல் அடிபடுவதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.

முதல் நாடகம்

முதல் நாடகம் ‘சத்தியவான் சாவித்திரி’ மதுரை பெரிய தகரக் கொட்டகையில் அரங்கேறியது. இப்போது அந்தக் கொட்டகை இருந்த அடையாளமே தெரியவில்லை. எல்லாம் வீடுகள் நிறைந்து விட்டன.

மேல மாசி வீதியில் சின்னத் தகரக் கொட்டகை ஒன்று இருந்தது. இப்பொழுது அது சந்திரா டாக்கீஸ் என்று சொல்லப் படுகிறது. இவ்விரண்டைத் தவிர அப்போது மதுரையில் நான் அறிந்த வரையில் வேறு நாடக அரங்கம் கிடையாது.

பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் திரு சி. எஸ்.சாமண்ணா ஐயர் எங்களுக்கெல்லாம் பவுடர் தொட்டு நெற்றியிலிட்டு வேஷம் போட்டு விட்டார். எனக்குத் தலையில் நிறைய முடி இருந்ததால் அதிலேயே கொண்டை போட்டார்கள். இடுப்பில் முழங்கால் வரை, தூக்கி ஒரு மஞ்சள் பட்டுத் துண்டைத் தார் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் இடுப்பைச் சுற்றி ஒரு சிவப்புப் பட்டு இரண்டு கால்களிலும் ‘கஜ்ஜை’ கட்டப்பட்டது. நாரதர் கதித்தை போட்டு ஆடிக் கொண்டே வரவேண்டும். நான் அரங்கில் பிரவேசிக்கும் சமயத்தில் யாரோ ஒருவர் வந்து என் கையில் மரத்தால் செய்த ஒரு வீணையைக் கொடுத்தார்.

எமனைக் கண்டு பயம்

‘சரிகம பதநியாம் ஏழு சுர நிலை லய சங்கீத சுகமே பெரிய சுகம்’ என்ற பாடலைப் பாடிய வண்ணம் நான் ஆடிக் கொண்டே அரங்கில் பிரவேசித்தேன். எல்லோரிலும் நான் மிகச் சிறுவனாக