பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452


வில்லை. அது முழுக்க முழுக்க நோய் நொடி ஒன்றுமில்லாமல் உயிரோடு இருக்கிறது. வளர்ந்து கொண்டும் வருகிறது.

“ஆஹா! அந்தக் காலத்தைப்போல் வருமா? முந்தி அப்படி யெல்லாமிருந்தது; இப்படியெல்லாமிருந்தது என்ற வீண் புகழ்ச்சி உளுத்துப்போன பழைய போக்கு. நான் சொல்லுகிறேன்; பண்டைக் காலத்தில் நாடகக்கலை மாட்டு வண்டி வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அது விமான வேகத்தில் இருந்து வருகிறது. மாட்டு வண்டி வேகத்திலிருந்து திடிரென்று விமான வேகம் வந்துவிடவில்லை. படிப்படியாகதான் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

“காளை மாடு பூட்டிய கட்டை வண்டி வேகத்தில் ‘தெருக் கூத்து'களும், சைக்கிள் முதலியவற்றின் வேகத்தில், ஸ்பெஷல் நாடகங்களும் மேட்டார் வேகத்தில் முறைப்படி தொழில் நடத்தும் கம்பெனியாரின் நாடகங்களும் முன்னேறித்தான் வந்திருக்கின்றன. அதிலும் நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் டி.கே.எஸ். சகோதரர்களும் நான் முன் குறித்த விமான வேகத்திற்கே வந்து விட்டார்கள் என்று கூறலாம்.

“நிலைமை இப்படியிருக்கும்போது, கொஞ்சம்கூட அஞ்சாமல் சினிமா வந்து நாடகத்தைக் கொன்றுவிட்டதென்று பழி போடுவது ஞாயமா? நீங்களே சொல்லுங்கள்! இது மிகவும் அபாண்டமான பொய்ப் பழி.

“நாடகமும் சினிமாவும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் தான். இரண்டு பேருக்கும் நல்ல வலுவிருக்கிறது. ஒருவரை யொருவர் கொல்ல முடியாது. நடிப்பு இருவருக்கும் பொதுச் சொத்து. இதை இருவரில் யார்வேண்டுமானலும் வாரியெடுத்துக் கொள்ளலாம். அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம். இது. எடுக்க எடுக்கக் குறையாத சொத்து. இதில் சண்டையென்ன, சச்சரவென்ன?”

“நாடகக் கலை அபிவிருத்தி அடைந்துவிட்டது என்பது உண்மையானால் இந்த மாநாடு எதற்கு? என்று கேள்வி உண்டாகிறதல்லவா? இதெல்லாம் ஒரு விளம்பரந்தானே! என்னென்