பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460


யாகவே காட்டின. சிவாஜியை எதிர்க்கும் வீரன் ஜெகதேவாக நான் நடித்தேன். நாடகம் நல்ல வசூலுடன் சிறப்பாக நடை பெற்றது. பிரண்டு ராமசாமியும் டி. என். சிவதாணுவும் ஹிக்குமத் துக்குமத் என்னும் இரு வீரர்கள் நடித்தனார். இவ் விருவருடைய நகைசுவைக் காட்சிகள் மேலும் மெருகூட்டி நாடக வெற்றிக்குத் துணைபுரிந்தன.

காளமேகம்

கவியரசு காளமேகத்தின் பாடல்களைப் படித்த நாளிலிருந்து அப்புலவர் பெருமானுடைய வாழ்க்கையை நாடகமாக நடத்த ஆவல் கொண்டிருந்தோம். சின்னண்ணா ஏற்கனவே குமாஸ்தாவின் பெண், ராஜாபர்த்ருஹரி, வித்யாசாகரர் ஆகிய மூன்று நாடகங்களை எழுதிஅவை வெற்றியோடு நடந்து விட்டதல்லவா? அந்த உற்சாகத்தில் இப்போது காளமேகத்தையும் அவரே எழு தினார். அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். தனிபாடல் திரட்டிலுள்ள கவி காளமேகத்தின் நகைசுவை மிகுந்த பாடல்களுக்குச் சிறப்பிடம் கொடுத்து நாடகத்தை உருவாக்கினார். நாடகக்கதை பெரும்பாலும் விநோத ரச மஞ்சரி யிலுள்ள காளமேகப் புலவரின் கதையைத் தழுவியே அமைக்கப் பெற்றது.

ஆயர் குலப் பெண்ணாெருத்தி காளமேகம் களைத்து வரும் போது குடிப்பதற்கு மோர் கொடுக்கிறாள். தண்ணிர் மிகுதியாகக் கலந்த மோர். மேரைக் குடித்துவிட்டுப் புலவர் பாடுகிறார். வானத்திலிருக்கும்போது இந்த மோருக்குக் ‘கார்’ என்று பெயர். மழையாகத் தரையில் விழுந்த பின் இதற்கு ‘நீர்’ என்று பெயர். இவரைப்போன்ற ஆய்ச்சியர் கையில் வந்தபிறகு ‘மோர்’ என்று பெயர் பெற்று விடுகிறது. மோர் தண்ணிராக உள்ளது என்பதைக் கவினார்,

காரென்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய்நெடுந்தரையில் வந்ததன்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!"