பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462


காளமேகம் நாடகம் 17-2-1944 இல் தொடங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகத்தை ஈரோடு நகரமக்கள் பிர மாதமாக ரசித்தார்கள்.

மண்மாரிப் பொழிந்தது

நாடகத்தின் இறுதிக் காட்சியில் கவி காளமேகம் மனம் நொந்து அறம் பாடுகிறார். மண்மாரி பொழிகிறது. அத்தோடு நாடகம் முடிகிறது. இக்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என் பதற்காக ஏதேதோ செய்து பார்த்தோம். வழக்கம்போல மின்னல் இடி, மழை, அதற்கேற்ற ஒசை இவற்றையெல்லாம் காண்பித் தோம்; ஆனால் எங்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பத்து நாட்கள் நாடகங்கள் நடந்தபின் ஒரு புதிய யோசனை தோன்றி யது. மேலே பரண்மீது பல இடங்களில் இருந்து மரத்துரள்களை அப்படியே தூவிக் கொண்டிருந்தால் மண்மாரிப் பெய்வது போல் இருக்குமெனத் தோன்றியது. அப்படியே காலையில் ஒத்திகை பார்த்தோம். பிரமாதமாக இருந்தது. இரவு நாடகத்திலும் அப்படியே செய்யத் திட்டமிட்டோம். பெரியண்ணாவுக்கு எங்கள் திட்டம் தெரியாது.

இரவு நாடகத்தில் எமகண்டம் பாடிவிட்டுக் கீழிறங்கினேன். கோபத்தோடு அறம் பாடினேன்.

கோளர் இருக்கும் ஊர்: கோள்கரவு கற்ற ஊர்:
காளைகளாய் நின்று கதறும் ஊர் காளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கருத்து
மண்மாரிப் பெய்கஇந்த வான்

கேதார கௌளை ராகத்தின் நான் வெண்பாவை ஆவேசத்தோடு பாடி முடித்ததும் திட்டப்படி ‘சோ’ என்று மழை ஒசையும் மின்னல் மின்னி இடியும் முழங்கின. மேலிருந்து மரத்துாள் மண் மாரியாகப் பொழிந்தது. சபையோரெல்லாம் ஆரவாரத்தோடு பிரமாதமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாடகம் முடிந்ததும் மேலிருந்து முன்மாரியாகப் பெய்த மரத்துாள் மாரியைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதுதான் பெரும்பாடாக இருத்தது.