பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

469


பெரியாரின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களைச் சந்தித்து விபரங்களைச் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடுடைய நண்பர்கள் ஈரோட்டில் ஏராளமாக இருந்தனார். அவர்களெல்லாம் செய்தியைக் கேட்டு வருந்தினார்கள். இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த காலம் அது. அந்தக் கொள்கையிலே நாங்கள் முற்றிலும் மாறுபட்டு நின்றோம்.

சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே பெரியார் அவர்களோடு எங்களுக்கு நெருங்கிய உடன்பாடு இருந்தது. அவரது பெருமைக்குரிய தொண்டினை நாங்கள் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை. பெரியார் அவர்கள் என்றும் எங்கள் மதிப்புக்கு உரியவர்தாம். ஆனாலும் எங்கள் அடிப்படையான சில கொள்கைகளை இதற்காக இழக்க முடியாதல்லவா?

மாலை 6 மணி ஆயிற்று. அறிஞர் அண்ணா ஈரோட்டில் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்திக்க இயல வில்லை. நாடக அரங்கின் முன் போலீசாரின் நடமாட்டம் அதிகரித்தது. ஆங்காங்கு சிலர் கூட்டங் கூட்டமாக நின்றார்கள். ஏதோ நடைப்பெறப் போவது போன்ற சூழ்நிலை காணப்படது. மணி 8 அடித்தது. டிக்கட் கொடுக்கும் அறை திறக்கப்பட்டது. மக்கள் ஆண்களும் பெண்களுமாக சாரி சாரியாக வந்து டிக்கெட் வாங்கினார்கள். வாயில் திறக்கப்பட்டது. பெரியண்ணாவும், கொட்டகைச் சொந்தக்காரர் முதலாளி சாய்புவும் சாய்மான நாற்காலிகளில் நுழை வாயிலருகே அமர்ந்திருந்தார்கள்.

சிவதானு பெற்ற பட்டம்

சரியாக 9.30க்கு நாடகம் தொடங்கப் பெற்றது. உள்ளிலும் வெளியிலுமாக மக்கள் குழுமியிருந்தனார். மரியல் எதுவும் நடை பெறவில்லை. எவ்விதக் குழப்பமும் இல்லை. நாடகம் அமைதியாக நடந்தது. அதற்கு முன் நடந்த எல்லா இராமாயண நாடகங்களையும் விட அன்று மிகச் சிறப்பாக் நடந்தது. தமிழ் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்திய எங்கள் நகைச்சுவை நடிகர் சிவதானுவை நாடக மாநாட்டின்