பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

473


குடியிருந்தோம். அனந்தன் கம்பெனியில் ஆரம்பகால முதலே இருந்து வருபவர். இடைக்காலத்தில் ஆடை அணிவிப்போராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இடையே சில ஆண்டுகள் நோயினல் பீடிக்கப்பட்டு காசி-கயா முதலிய வட இந்தியத் தலங்களுக்கெல்லாம் சென்று சன்னியாசியாகவே காலம் கழித்தவர். மதுரையில் 108-வதுநாள் சிவலீலா நடைபெற்ற போது ஏறத்தாழ ஆயிரம் பரதேசிகளுக்கு அன்னம் பாலித்தோம். அப்போது பரதேசிகளுள் ஒருவராக வந்த அனந்தனை நாங்கள் அடையாளம் கண்டு பிடித்தோம். சந்நியாசிக் கோலத்தைக் களைத்து விட்டுக் கம்பெனியிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டோம். அதன் பிறகு அனந்தன் எனக்கு அன்புப் பணியாளராகக் கம்பெனியிலேயே இருந்தார்.

கம்பெனிப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முறைப்படி பரத நாட்டியம் கற்றுத்தர பிரபல நட்டுவனார் திரு முத்துக்குமா சாமிப்பிள்ளையைக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவர் அதிகாலையிலேயே நீராடி பூஜை புனஸ்காரங்களெல்லாம் செய்யக் கூடியவர். நானிருந்த தனிவீட்டிலேயே அவருக்கு ஒர் அறை ஒதுக்கிக் கொடுத்தேன். தினமும் காலை 10 மணிமுதல் 12மணி வரை நானிருந்த இடத்திலேயே நடனப் பயிற்சி நடைபெறும். கம்பெனிப் பிள்ளைகளில் சிறப்பாக ஜெயராமன், செளந்தராஜன், சங்கரன் ஆகிய மூவரும் மற்றும் சிலரும் இவரிடம் மிகுந்த சிரத்தையோடு நடனம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் மூவரும் இப்போது பரதநாட்டிய ஆசிரியர்களாக நல்லமுறையில் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோட்டில் வந்த இளஞ் சிறுமியர்

ஈரோட்டில் சிவலீலா நடை பெற்ற போது, எங்கள் கம்பெனியின் பழைய பலசாலி கோபாலபிள்ளை தம் சொந்த ஊராகிய கோட்டயத்திலிருந்து இரு சிறுமியரை அவர்கள் தந்தையோடு அழைத்து வந்தார். இருவரில் மூத்தவள் சீதாவுக்குப் பதினான்கு வயதிருக்கும். நன்றாகப் பாடினாள். அவள் தங்கை இரத்தினம் சுமாராகப் பாடினாள். இருவருக்கும் குரல் நன்றாயிருந்தது. எனவே, கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். இரு சிறுமியரும் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்தார்கள். சீதா இராமாயணத்தில் பால சீதையாக நன்றாக நடித்தாள். பில்ஹணன் நாடகம் தயா