பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

481


கிராம ஊழியன் - சினிமா
உலகம் நாரதர் - பிரசண்ட விகடன்
நவயுவன் - செட்டி நாடு
ஹனுமான் - சினிமா நிலையம்
கலை வாணி - குமரன்

பத்திரிக்கை மூலம் இவ்வாறு கிடைத்த பாராட்டைவிட நூற்றுக் கணக்கான நாடக ரசிகர்கள் எங்களுடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி நாங்கள் இதில் வெற்றி பெற வேண்டுமென நல்லாசி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழ் நாடகப் பரிசு சம்பந்தமான இந்தப் பிரசுரங்களை, எங்களுக்கு அறிமுகமான தனிப்பட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் அனுப்பியிருந்தோம். பத்திரிக்கைகளிலே வந்த செய்திகளைப் பார்த்து, எங்களுக்கு எழுதிக் கேட்ட எழுத்தாளர்கள் பலருக்கும் பிரசுரங்களை அனுப்பி வைத்தோம். இந்தத் திட்டத்தில் புராண இதிகாச நாடகங்கள் வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. சமூக நாடகங்களையும் சரித்திர நாடகங்களையும்தான் கேட்டிருந்தோம். ஈரோட்டில் நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு கூட்டிய எங்கள் நோக்கத்தில் சூழ்ச்சியோ தந்திரமோ எதுவும் இல்லையென்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தி இருந்தோம். புதிய நாடகக்தை உருவாக்கப் போதுமான அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் முதல் நாடகம் 8- 1-45ல் எங்களுக்குக் கிடைத்தது, உற்சாகமளிப்பதாக இருந்தது. தொடர்ந்து வாரத்திற்கு இரண்டொரு நாடகங்கள் வந்து கொண்டேயிருந்தன. பிரசுரத்தில் குறித்தபடி 1. 6. 45 வரை காத்திருந்தோம். அதற்குப் பின்னார் நானும் சின்னண்ணாவும் தனித் தனியாகப் படித்துக் குறிப்பெடுத்தோம். மொத்தம் வந்த 59 நாடகங்களில் 10 நாடகங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை மீண்டும் படித்தோம்.

பரிசுக்குரிய நாடகங்கள்

இறுதியாகப் பரிசுக்குரிய இரு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. குறித்தபடி 1. 9. 45இல் எங்கள் முடிவினைப் பிரசுரமாக வெளியிட்டுப் பத்திரிக்கைகளும் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் அறிவித்தோம். ஒரு தினசரிப் பத்திரிகை