பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


நாடகப் புலமை

அநேகமாக எல்லா நாடகங்களிலும் எனக்கு நாரதர் வேடமே கொடுக்கப்பட்டு வந்ததாக முன்பு குறிப்பிட்டேனல்லவா? ஒருநாள் பழனியா பிள்ளை, ‘சுவாமி! நம்முடைய சண்முகம் கதாநாயகனுக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுத வேண்டும்’ என்று கூறினார்.

சுவாமிகள் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அந்த விநாடியே அவரது சிந்தனை செயல்பட ஆரம்பித்துவிட்டது. பழனியாபிள்ளை சொல்லிய வார்த்தைகள் சுவாமிகளின் நாடக இதயத்தை தொட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதிருந்தே அவர் வானத்தையும் பூமியையும் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

அன்று மாலேயே சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்றார். ‘அபிமன்யு சுந்தரி’ அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ‘அரிக்கன் விளக்கை’ வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய படுக்கையருகே அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப் பெற்றிருந்தது. என்ன ஆச்சரியம்! ....

இந்தக் காலத்தில் ஒரு நாடகம் எழுதுவது என்றால் எத்தனை எத்தனை முன் ஏற்பாடுகள்; ஆலோசனைகள்; விவாதங்கள். வசனம் எழுதுவது ஒருவர்; பாடல் இயற்றுவது வேறொருவர்; இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இயற்றிய நாடகம் மேடையில் நடிப்பதற்குப் பொருத்தமாக இருக்குமாவென்பது வேறு விஷயம். சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே நாள் இரவில் நூற்றுக் கணக்கான பாடல்கள் உரையாடல்களுடன் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதியிருந்த அபிமன்யு சுந்தரி நாடகத்தைக் கண்டு எல்லோரும் அதிசயப்பட்டார்கள். ஒரு நாடகத்தை நகல் எடுப்பதற்குக்கூட ஒருநாள் இரவில் முடியாது. நான்கு மணி