பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள்

திருச்சியில் நாங்கள் இருந்த 1945-46இல் சிறப்புக்குரிய நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. அவற்றில் நாடகத் துறையின் வளர்ச்சியினை விரும்பும் கலா ரசிகர்களுக்கு, மகிழ்வளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் இரண்டு. ஒன்று ஈரோடு மாநாட்டினைப் பின்பற்றி 31-3.45இல் தஞ்சையிலுள்ள கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த இரண்டாவது நாடகக்கலை மாநாடு. சங்கத் தலைவர் திரு ஐ. குமாரசாமிப்பிள்ளை முன்னின்று இதனை நடத்தினார். இந்த மாநாட்டில் எங்கள் நாடக சபையின் சார்பில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி கலந்து கொண்டார். முதல் நாடகக்கலை மாநாட்டின் செயலாளர் டி. என். சிவதாணு இம் மாநாட்டிலும் செயலாளராக இருந்து மாநாட்டைச் சிறப்புற நடத்தி வைத்தார்.

இரண்டு, 9.2.46இல் சென்னையில் நடைபெற்ற முன்றாவது நாடகக்கலை மாநாடு. இதனை முன்னின்று நடத்தியவர் நாடகமணி எம். என். எம். பாவலர். இந்த மாநாட்டிலே தான் கே. ஆர் இராமசாமிக்கு கடிப்பிசைப் புலவர் என்றபட்டம் வழங்கப்பட்டது இந்த மாநாட்டிலும் டி. என், சிவதாணு கலந்து கொண்டார். இம் மூன்று மாநாடுகளுக்குப் பின், சென்ற 28 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நாடக வளர்ச்சிக்கென்று மாநாடு எதுவும் இன்று வரை நடைபெற வில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பழைய முதலாளி பழனியாபிள்ளை

எங்கள் பழைய நாடக முதலாளி திரு. பழனியாபிள்ளை திருச்சியில் எங்களைச் சந்தித்தார். அவர் மிகவும் சிரமமான நிலையிலிருந்தார். ஸ்ரீமீனலோசனி பால சற்குண நாடக சபா என்னும் பெயரால் ஒரு நாடக சபையைப் பல ஆண்டுகள் சிறப்