பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506


எழுதப் பெற்றது. உரையாடல்கள் புதியநடையில் எழுதப்பெற். றிருந்தன. நாடகம் நன்றாயிருந்தது. நடிகர்களும் சிறப்பாக நடித்தார்கள். கவியின் கனவு, எதிர்பார்த்தது ஆகிய இரு நாடகங்களும் எனக்குப் புதிய உற்சாகத்தை தந்தன. இரு நல்ல நாடகங்களைப் பார்த்த களிப்புடன் திருச்சிக்குத் திரும்பினேன்.

பூவளூர் பொன்னம்பலனார்

பெரியார் அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கத்தோழர்களில் பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்கள் குறிப்பிடத்தக்க தலைவராவார். சிறந்த சொற்பொழிவாளர். கோட்டையூரில் சண்டமாருதம் என்னும் வார ஏட்டினை அவர் நடத்தி வந்தார். எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். பெரியண்ணாவுக்குப் பொன்னம்பலஞரிடம் பெருமதிப்பு உண்டு. நீண்ட காலமாக அவர்தம்முடைய ஊருக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்தை ஏற்று, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பே. விசுவகாதம் அவர்களுடன் 1.5-45 இல் நானும் பெரியண்ணா, பகவதி எல்லோரும் பூவாளுர் சென்றோம். பொன்னம்பலனார் இல்லத்தில் விருந்து புசித்தோம். பூவாளுர் உடற் பயிற்சிக் கழகத்தார் எங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத் தினார்கள். அங்கிருந்து லால்குடி சென்றோம். லால்குடி திரு வள்ளுவர்கழகத்தில் எங்களுக்கு வரவேற்பு நடந்தது. திரும்பு கையில் திருச்சி வரும்வரை முத்தமிழ்க்காவலரும் நானும் மிகவும் பயனுள்ள ஒரு நாடகக் கதை அமைப்பினைப்பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம். சில ஆண்டுகளுக்குப் பின் முத்தமிழ்க் காவலர் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச்செல்வம் நாடகக்கதை அன்றைய உரையாடலிலே உருவானதுதான் என்பதுகுறிப்பிடத் தக்கதாகும்.

மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு வருகை

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் 2. 2. 46ல் திருச்சிக்கு வருகை புரிந்திருந்தார். அன்று திருச்சி மாநகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. நாங்கள் செய்த தவப்பேற்றின் காரணமாக அன்றுதான் எங்கள் தேசபக்தி நாடகமும் திருச்சியில் ஆரம்பமானது. 1931இல் நாங்கள் மரையில் அரங்கேற்றியபோது தேச