பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

509


நாம் இருவர்-தாகசாந்தி

பேராசிரியர் வ. ரா அவர்களைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றிருந்த பொழுது என்னெஸ்கே நாடக சபையின் நாம் இருவரை ஒற்றைவாடை அரங்கில் பார்த்தேன். ப. நீலகண்டன் அவர்களின் இரண்டாவது நாடகம் இது. முள்ளில் ரோஜா திருச்சியில் நடந்து கொண்டிருக்கும் போதே சகோதரர் எஸ். வி. சகஸ்ர நாமத்தின் அழைப்பினை ஏற்று என்னெஸ்கே நாடக சபைக்கு நாம் இருவர் நாடகத்தைக் கொடுத்திருந்தார் ப. நீலகண்டன். நாடகத்தை மிகவும் உன்னதமாகத் தயாரித்திருந்தார் சகஸ்நாமம். இப்போது கே. ஆர். இராமசாமி தனியே கிருஷ்ணன் நாடக சபை என்ற ஒரு புதிய சபையைத் தஞ்சாவூரில் தொடங்கி விட்டதால் நாம் இருவரில் சகஸ்ரநாமமே கதா நாயகனாக நடித்தார். திரு வி. கே. ராமசாமி டி. ஏ. ஜெயலட்சுமி முதலியோரும் இதில் நடித்தனார். நாடகம் ப. நீலக்கண்டனின் நாடகப்புகழை மேலும் பலபடிகள் உயர்த்தியது. மறுநாளும் சென்னையில் தங்கினேன். ஸ்ரீ ராம பாலகான சபையாரின் தாகசாக்தி நாடகத்தை சென்னை சுகுண விலாச சபா நாடக அரங்கில் பார்த்ததாக எனக்கு நினைவு. இப்போது பிளாசா டாக்கீஸ் என்ற பெயரில் நடந்து வரும் அதே தியேட்டர்தான் அப்போது சுகுணவிலாச சபைக்குச் சொந்தமான நாடக அரங்காக இருந்தது. தாகசாந்தி நாடகத்தை நாஞ்சில் இராஜப்பா நல்ல முறையில் தயாரித்திருந்தார்.

காஞ்சில் இராஜப்பா

வைரம் அருணாசலம் செட்டியாரின் ஸ்ரீ ராமபால கான சபாவில் நாஞ்சில் இராஜப்பா நடிகராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு சிறந்த நடிகரும் எழுத்தாளரும் ஆவர். பக்தசாருக தாசராக இவர் நடித்ததை நான் ஒரு முறை காரைக் குடியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். புயலுக்குப்பின் என்று மற்றொரு சரித்திர நாடகத்தையும் பார்த்திருக்கிறேன். இதில் திரு. கே. ஆர். ராம்சிங் அவர்கள் மிக அற்புதமாக நடித்தார். இவருடைய அபாரமான நடிப்பு பிரபாத் டாக்கீசாரின் அமர்ஜோதியில் நடித்த சக்திரமோகனின் நடிப்பை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். வைரம் செட்டியார் கம்பெனியில் பல நடிகமணிகள் தோன்றிப் புகழ் பெற்றனார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்