பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


நேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தைக் கற்பனையாகவே ஒர் இரவுக்குள் எழுதி முடித்துவிட்டார் சுவாமிகள். அவரை முருகன் அருள் பெற்ற அருட்பெரும்புலவர் என்றே எல்லோரும் வியந்து பாராட்டினார்கள்.

‘அடே சின்னப் பயலே! இந்த அபிமன்யு நாடகம் உனக் காகவே எழுதப் பெற்றது’ என்று கூறிச் சுவாமிகள் அன்று என் முதுகிலே தட்டியபோது அது எனக்குப் பெரிதாகத் தோன்ற வில்லை. இன்று அதை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.

தந்தையார் நடித்த நாடகம்

முதல் நாடகம் சத்தியவான் சாவித்திரி முடிந்த பிறகு, நான்கு நாட்கள் ஒய்வு கொடுக்கப்பட்டது. இடையே ஒருநாள் நாங்கள் நடித்த அதே கொட்டகையில் சுவாமிகளின் கோவலன் நாடகம் நடைபெற்றது. ஸ்பெஷல் நாடக நடிகர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

திரு. எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார். மாதவியாக ரத தினசாமிப் பிள்ளையும் கண்ணகி, காளியாக என் தந்தை டி. எஸ் கண்ணாசாமிப்பிள்ளையும் நடித்தார்கள். என்னுடைய நான்கு வயதுப் பருவத்தில் ஒரு முறை என் தந்தையார் நல்ல தங்காள் நாடகத்தில் நல்லதங்கையாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது நான் நல்லதங்கையின் கடைசிப் பிள்ளையாக நடித்த நினைவிருக்கிறது. நாஞ்சில் நாட்டிலுள்ள தாமரைக் குளம் என்ற ஊரில் அந்த நாடகம் நடந்தது. ஆனால், அது ஏதோ கனவுபோலத்தான் நினைவில் இருந்தது. இப்போது கோவலன் நாடகத்தில் அவர் கண்ணகியாக நடித்ததைத்தான் முதலும் கடைசியுமாய்ப் பார்த்ததாகக் கொள்ளவேண்டும். இந்த நாடகமும் சுவாமிகளின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றதால் நாங்கள் எல்லோரும் நாடகம் பார்த்தோம்.

எம். எஸ். தாமோதரராவ் அந்தநாளில் மிகச் சிறந்தநடிகராக விளங்கியவர், அவருடைய நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனாரின் மனோகரன், நாடகத்தில் மனோகரனக அற்புதமாக நடிப்பார்