பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

511


ரின் நினைவாக அந்த நாடக சபைக்கு, கிருஷ்ணன் நாடக சபை என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரே நடிப்பிசைப் புலவ ரின் நன்றியுணர்வினைக் காட்டியது. கிருஷ்ணன் நாடக சபையின் முதல்நாடகமாக மனோகரா தொடர்ந்து நடைபெற்றது.7.3.46ல் மனோகரா நாடகம் பார்க்க நான் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். சுதர்சன சபா ஹாலில் மனோகரா நடைபெற்றது. கே. ஆர். இராமசாமி என்னெஸ்கே நாடக சபையில் மனோகரனக நடித்த போது அதனைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. தொடர்ந்து பலநாட்களாக அவர்மனோகரனாகநடித்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. நான் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து மனோகரனாகநடித்ததேயில்லை. அப்படி நடிக்க என்னல் முடிவதில்லை. எங்கள் கம்பெனியில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை மனோகரனக நடிக்க எத்தனையோ முறை வற்புறுத்தியிருக்கிறேன். பணிவோடு மறுத்துவிட்டார். அவரது மனோகரன் நடிப்பைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரே ஆர்வமாக இருந்து. பார்த்தேன்; ரசித்தேன்; வியந்தேன்; பாராட்டினேன்.

வி. சி. கணேசனின் பத்மாவதி நடிப்பு

அன்று மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்த இளைஞரின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 1922ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நான் மனோகரன் பாத்திரத்தை ஏற்று நடித்து வந்திருக்கிறேன். ஆண்களும் பெண்களுமாக எத்தனையோ நடிக-நடிகையர் என்னுடன் பத்மாவதியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அன்று பத்மாவதியாக நடித்த அந்த இளைஞரைப்போல் அவ்வளவு துணுக்கமாகவும் திறமையாகவும் யாருமே நடித்ததில்லையென உறுதியாகக்கூறலாம். அநேகமாகப் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் எல்லோரையும் ஒரளவுக்கு நான் அறிவேன்.இந்த இளைஞர் எனக்குப் புதியவராகஇருந்தார். அருகிலிருந்த கம்பெனியின் நாடக ஆசிரியர் எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் என்னுடைய பழைய நண்பர். என்னோடு சுவாமிகள் கம்பெனியில் நடித்தவர். அவரிடம் கேட்டேன். “இந்த பத்மாவதி யார்?” என்று. “இவரைத் தெரியாதா? இவர்தான் வி, சி. கனேசனின்” என்றார் அவர், அன்றுதான் முதல்முறையாக திரு. கணேசனின்