பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512


நடிப்பைப் பார்த்தேன். நாடகம் முடிந்ததும் கே. ஆர். இராம சாமியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவதியின் நடிப்பைப்பற்றி மிகவும் பாராட்டினேன். இந்த இளைனார் விரைவாக முன்னுக்கு வரக்கூடியவர். இவரை விட்டு விட வேண்டாம்” என்று கூறினேன்.

முன்னாள் நடிகமணிகள்

இதன் பிறகு கே. ஆர். இராமசாமி, தான் என்னெஸ்கே நாடக சபையிலிருந்து பிரிந்து தனியே கம்பெனி தொடங்கி யதற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறிய காரணங்கள் சரியோ, தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் சிறையிலிருக்கும் கலைவாணர் பெயரால் என்னெஸ்கே நாடகசபை என்று ஒன்றும் கிருஷ்ண நாடகசபை என்று ஒன்றுமாக இரு நாடகக் குழுக்கள் இயங்கி வருவதும் இவ்விரு குழுக்களையும் நடத்துபவர்கள் எங்கள் குழுவின் முன்னாள் நடிகமணிகள் எஸ். வி. சகஸ்ரநாமமும், கே. ஆர். இராமசாமியும் என்பதிலே நான் பெருமை அடைவதாகவும் கூறினேன். உடனே இராமசாமி சட்டென்று “யார் பெயரால் நடத்துகிறோமோ அந்தப் பெயருக்குரிய கலைவாணரும் நம் கம்பெனியின் நடிகர்தானே!” என்றார். அவர் அவ்வாறுமணம் விட்டுக் கூறியது என்னை மேலும் பெருமைப் படுத்துவதாக இருந்தது. நன்றி கூறிவிட்டுத் திருச்சிக்குத் திரும்பினேன்.

வானொலி நிலையத் தொடர்பு

நாங்கள் திருச்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே திருச்சி வானொலி நிலையத்தோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது. எங்கள் குழுவின் இளம் நடிகர்கள் பக்ததுருவன், கந்தலீலா ஆகிய இரு நாடகங்களில் நடித்தார்கள். தம்பி பகவதி பக்தமீராவில் ராணாவாக நடித்தார். 23. 3- 45இல் மனோகரா நாடகத்தைப் பெரும்பாலும் நாங்களே நடித்தோம். பெ. கோ. சுந்தரராஜன் அவர்களின் ஸ்ரீஹர்ஷன் என்னும் சரித்திர நாடகத்திலும் நான் நடித்தேன். நிலையத்திலுள்ள எழுத்தாள நண்பர்கள் சுகி. சுப்பிரமணியம், கே. பி. கணபதி (மாறன்) எம். பி. சோமு, ஆறுமுகம் குகன், இசை இயக்குநர் கே. சி. தியாகராஜன் முதலியவர்களுட னெல்லாம் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அகிலன், ‘சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம், ‘கிராம ஊழியன்’ ஆசி