பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516


நீதிபதி செளத்திரி பாராட்டு

அந்தமான் கைதியிலும், முள்ளில் ரோஜாவிலும் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகனக நடித்ததால் எனக்கு ஒய்வு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் சில நாடகங்களில் ஒய்வுபெற விரும்பினேன். என் எண்ணம் நிறைவேறவில்லை. எஸ்.எஸ். இராஜேந்திரன் கோவையிலேயே விலகிக்கொண்டார். ஆராய்ச்சிமணி என்னும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக அவரைக் கம்பெனியிலேயே இருக்கும்படி வற்புறுத்த நாங்கள் விரும்பவில்லை. கோவையில் இராஜேந்திரன் இல்லாததால் 10.6.46இல் ஆரம்பமான அந்தமான் கைதியில் கதாநாயகன் பாலுவாக நானே நடிக்க நேர்ந்தது. 11-6-46இல் நடைபெற்ற அந்தமான் கைதிக்கு நீதிபதிசெளத்திரி அவர்கள் தலைமை தாங்கி மிக நன்முகப் பாராட்டிப்பேசினார்.

இந்த நாடகம் நீதிபதியாகிய எங்களுக்கு வழி காட்டும் நாடகமாக அமைந்திருக்கிறது. குற்றம் செய்பவர்கள் எந்தச் சூழ்நிலைகளில் எல்லாம் அதைச் செய்கிறார்கள் என்பதை இந் நாடகத்தின் மூலம் நாங்கள் புரிந்துகொள்ளுகிறோம். கொலைக்குற்றம் செய்தவனுக்கு அதற்குரிய தண்டனையைக் கொடுக்கும் நாங்கள் அந்தக் குற்றத்தை அவன் ஏன் செய்கிறான்? எப்படிச் செய்கிறான்? எந்தச் சூழ்நிலையில் செய்கிறான்? என்பனவற்றை யெல்லாம் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை இந்த நாடகம் எடுத்துக் காட்டுகிறது”

என்று கூறினார் நீதிபதி செளத்திரி. அன்றைய வசூல் ரூ. 1275ம் நாடகாசிரியர், கவினார் கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றது.

வளையாபதி முத்துக்கிருஷ்ணன்

அந்தமான் கைதி நல்ல வசூலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்றது. 9.7-46இல் தம்பி பகவதி திடீரென்று மனைவியின் உடல்நிலை காரணமாக நாகர்கோவில் செல்ல நேர்ந்தது. அப்போது நான் பகவதி நடித்த நடராஜன் வேடத்