பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

517


தைப் புனைந்தேன். பாலு வேடத்திற்கு வளையாபதி முத்துக கிருஷ்ணனுக்குப் பயிற்சி அளித்தேன். முத்துகிருஷ்ணன் அதற்கு முன்பெல்லாம் அதிகமாக வேடம் புனைவதில்லை. வெளியே வேறு அலுவல்களைப் பார்த்து வந்தார். அவரது தோற்றம் கதா நாயகன் வேடத்திற்குப் பொருத்தமாக இருந்ததாலும், நடிப்புத் துறையில் ஈடுபட அவருக்கு ஆர்வம் இருந்ததாலும் அவரைப் பாலுவாக உருவாக்கினேன். நாலைந்து நாடகங்களில் நடித்த பின் அவருக்குப் பாலு மிகவும் பொருத்தமாக இருந்தது. தம்பி பகவதி திரும்பியபின் எனக்கு மீண்டும் அந்தமான் கைதியில் ஒய்வு கிடைத்தது.

10.10-46 முதல் தியேட்டர் ராயல் வாடகை உயர்த்தப் பட்டதாலும் நாங்கள் சொந்தமாகக் கட்டி வந்த கொட்டகை முடியாததாலும் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. பில்ஹனன் படப்பிடிப்புக்குத் தேதி நிச்சயித்து விட்டதால் கேவைக்கு அருகிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவானது.

பில்ஹணன் தொடக்க விழா

6-11-46இல் பில்ஹணன் படப்பிடிப்பு தொடக்கவிழா சென்ட்ரல் ஸ்டுடியோவில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. திருச்சி திருலோக சீதாராம் மற்றும் நண்பர்களெல்லாம் வந்திருந்து விழாவினைத் தொடங்கி வைத்தார்கள். பில்ஹனன் நாடக ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி அப்போது சென்ட்ரல் ஸ்டுடி யோவில் ஜபிடர் பிக்சர் ஸின் ஸ்ரீ முருகன் படத்திற்கு வசன கர்த்தாவாக நன்கு வளர்ச்சி பெற்றிருந்தார். அவரேபில்ஹனன் திரைப்படத்துக்குரிய உரையாடல்களையும் எழுதித் தர ஒப்புக் கொண்டார். நாடக பில்ஹணனைத் திரைப்பட பில்ஹணனாக எழுதும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பில்ஹணன் தொடக்கவிழா முடிந்ததும் 9-11-46இல் கோவையில் பட்டாபிஷேகம் முடித்துக்கொண்டு பாலக்காடு செல்ல முடிவு செய்தோம். பாலக்காடு கவுடர் பிக்சர் பாலஸ் அதிபர் திருமலைக் கவுடர் அவர்கள் எங்கள்பால் மிகுந்த அன்புடையவர். எனவே அவருடைய தியேட்டர் எளிதாகக் கிடைத்தது. கம்பெனி பாலக்காடு சென்றது.