பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

521


கொண்டேன். பாலக்காட்டில் இருக்கும்போது அவர்களிடம் ஊசிப்போட்டுக் கொண்டேன். கோவையில் இருந்தபோது எனது நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் போட்டுக் கொள்வேன். இப்படியே பில்ஹணன் படம் முடியும்வரை மருந்திலேயே காலம் கழித்தேன்.

மனுஷ்யன் நாடகம்

ஒருநாள் திங்கள்கிழமை ஒய்வு நாளன்று பாலக்காடு வாரியார் ஹாலில் மனுஷ்யன் என்னும் மலையாள நாடகம் பார்த்தேன். நாடகக் கதை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நாடக ஆசிரியர் திரு முதுகுளம் ராகவன் பிள்ளை, அதில் பிரண்டாக நடித்தார். டாக்டராக பிரபல மலையாள நடிகர் அகஸ்டின் ஜோசப் நடித்தார். அவருடைய நடிப்பை முன்பே கொச்சியில் ஏசு நாதர் நாடகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். இப்போது மனுஷ்யன் நாடகத்தில் அவரை டாக்டராகப் பார்த்ததும் அவர்மீது எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. காட்சிகளின் கவர்ச்சியோ ஆடம்பர உடைகளோ எதுவுமில்லாமல் அந்த நாடகம் என்னைக் கவர்ந்தது.

இதே நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து நல்ல காட்சி யமைப்புகளோடு நடித்தால் நாடகம் அபார வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நாடகம் முடிந்ததும் நாடக ஆசிரியரையும் அகஸ்டீன் ஜோசப் அவர்களையும் பாராட்டினேன். நாடகத்தைத் தமிழில் நடிக்க விரும்புவதாகக் கூறினேன். முதுகுளம் ராகவன் பிள்ளை மிகவும் மகிழ்ந்தார். “விரும்பினல் அப்படியே செய்யலாம். அது எனது பாக்யம்” என்றார். அதற்குப் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

கலையுலகின் எல்லையற்ற மகிழ்ச்சி

ஒருநாள் வாளையார் பகுதியில் வெளிப்புறக் காட்சியில் நடித்துவிட்டு வீடு திருப்பினோம். எல்லையற்ற மகிழ்ச்சி எங்களுக்காகக் காத்திருந்தது. ஆம் கலைவாணரும் பாகவதரும் விடுதலைப்பெற்றார்கள் என்ற நல்ல செய்தியினைக் காதாரக் கேட்டோம். உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலே மிதந்தது. 23. 5. 47இல் கலைவாணருக்குப் பட்சிராஜா ஸ்டுடியோவிலும் 24. 5. 47இல் எங்கள் ஷண்முகா தியேட்டரிலும் வரவேற்பு விருந்துகள் நடந்தன. நானும் இந்த