பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522


வரவேற்புக்களிலே கலந்து கொண்டேன். என். எஸ். கே. தமது சிறை அனுபவங்களை விரித்துச் சொன்னபோது என்னல் தாங்க முடியவில்லை. கண்கள் கலங்கின.

பாலகாட்டில் வசூல்குறைந்தது. கோவையில் பில்ஹணன் படமும் முடியவில்லை. கோவைக்கு அருகிலுள்ள திருப்பூர், தாராபுரம் ஆகிய இடங்களில் தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே கம்பெனி திண்டுக்கல் சென்றது. 27. 5. 47 இல் திண்டுக்கல்லில் நாடகம் தொடங்கப் பெற்றது. திண்டுக்கல்லிலிருந்து அடிக்கடி கோவை படப்பிடிப்புக்காக வந்து போய்கொண்டிருந்தோம்.

வானெலியில் முதல் பேச்சு

தமிழ் நாடகமேடை வசனங்கள் என்னும் தலைப்பில் திருச்சி வானெலி நிலையத்தார் என்னைப் பேச அழைத்தனார். அவர்கள் அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். 30.7. 47இல் அந்தப்பேச்சை பதிவு செய்யத் திருச்சிக்குச் சென்றேன். பண்டைக்கால நாடகங்களில் வசனங்கள் இருந்த நிலையையும், அதன் பிறகு தவத்திரு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் வசனங்களையும் விமர்சித்தேன். தேசபக்தியில் வெ. சாமிநாத சர்மா, அந்தமான் கைதியில் கவினார் கு. சா. கி. முள்ளில் ரோஜாவில் ப. நீலகண்டன் கவியின் கனவில் எஸ். டி. சுந்தரம் குமாஸ்தாவின் பெண்ணில் டி. கே. முத்துசாமி ஓர் இரவில் அறிஞர் அண்ணா ஆகியோர் கையாண்டுள்ள வசன நடை அழகைப்பற்றி ஆய்வுரை செய்தேன். திருச்சி நிலைய எழுத்தாள நண்பர்கள் என் ஆய்வுரையினை வெகுவாகப் பாராட்டினார்கள். அடுத்த வாரத்தில் என்னுடைய வானெலிப் பேச்சு பிரசண்ட விகடனில் வெளிவந்தது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களும் அதனைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். வானெலிப் பேச்சுக்காய்த் திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்குச் சென்ற அன்றே முற்பகல் பேச்சைப் பதிவு செய்து விட்டுத் தஞ்சை வந்து அன்றிரவே அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் பார்த்தேன். வசனங்கள் அற்புதமாக இருந்தன. கதை அமைப்பும் புதுமையாக இருந்தது. கே. ஆர். இராமசாமி இந்நாடகத்தில் மிக உருக்கமாக நடித்தார். சில நாட்களுக்குப்பின் 13-8- 47இல் குடந்தைக்குச் சென்று கே. எஸ் இரத்தினம் அவர்களின் தேவிநாடக சபாவில் ‘சூறாவளி’ என்னும்