பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/533

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
524


கூரிலுள்ளப் தமிழ் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்புத் தோன்றியது. திருவாளர்கள் எஸ். நதானியல் ஆர். கே. ராம், பி. எஸ். மணி, எஸ். ரீவிதாஸ் , வி. மார்க்கண்டன் இரா. வேலாயுதப் பெருமாள் முதலிய தேசபக்தர்கள் அந்த அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு பெருமுயற்சி யெடுத்துக் கொண்டனார். திருவிதாங்கூரில் தமிழியக்கத்தை வளர்ப்பதற்கு இந்த அமைப்பைச் சார்ந்த பெருமக்கள் அரும்பாடுபட்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து இந்த அமைப்புக்குத் தொடக்கக் காலத்திலேயே பேராதரவு காட்டினார் தலைவர் ம. பொ. சிவஞானம்.அவர்கள். நாங்களும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களும் திரு-தமிழர் இயக்கத்திற்கு ஆரம்ப நாள்தொட்டே ஆதரவளித்து வந்தோம். தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பும் இவர்களுடைய முயற்சிகளை வரவேற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்காக 24. 8. 47இல் திண்டுக்கல்லில் தேசபக்தி நாடகத்தை நடத்தினோம். அன்றைய வசூல் ரூபாய் 1035ம் திரு.தமிழரியக்க நிதிக்காக அவர்களிடம் எங்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. மேடையில் நான் பேசிய போது, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் முயற்சிகள் வெற்றி பெறவும், அங்குள்ள தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை ஆகிய தாலுக்காக்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தாய்த் தமிழகத்தோடு சேரவும் வாழ்த்துக்கூறினேன்.

பாரதி மண்டபத் திறப்பு விழா

எட்டையபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்திருந்தது. சென்னையிலிருந்து ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர் திரு நாரண துரைக்கண்ணனும் கடிதம் எழுதியிருந்தார். 11-10-72ல் அவர் திண்டுக்கல் வந்தார். மறுநாள் நாங்களிருவரும் புறப்பட்டுப் பகலில் எட்டையபுரம் சேர்ந்தோம். தமிழக முழுவதிலுமிருந்து எழுத்தாள நண்பர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனார். பேராசிரியர் சீனிவாசராகவன், கு. அழகிரி சாமி, திருலோக சீதாராம், புத்தனேரி சுப்பிரமணியம், கவினார் தே. ப. பெருமாள், பெ. தூரன் முதலிய பலர் எனக்குப் பழக்கமானவர்கள் இருந்தார்கள். எல்லோரும் எட்டைய