பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530


தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உடல்நலம் மிகவும் குன்றி யிருப்பதாகவும், வயிற்று நோய் அதிகரித்திருப்பதாகவும், எங்காவது பத்து நாட்கள் சென்னையைவிட்டு வெளியே போய் ஒய்வு பெற விரும்புவதாகவும் எழுதியிருந்தார். கோவை இராமனத புரத்தில் படப்பிடிப்பை முன்னிட்டு ஒரு பெரிய வீட்டில் தங்கி யிருப்பதாகவும், விரும்பினல் எங்கள் இல்லத்திலேயே தங்கிப் பூரண ஒய்வு பெறலாமென்றும் பதில் எழுதியிருந்தேன். தலைவர் அவர்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டார். 1947 நவம்பர் கடைசி வாரத்தில் கோவைக்கு வந்து எங்களோடு தங்கிளுர், ஒய்வு பெறும் நோக்கத்தோடு தான் வந்தார். ஆனால் நண்பர்கள் அவரை ஒய்வுபெறவிடவில்லை. தினமும் யாராவதுவந்து அவருக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். திங்கட்கிழமை எனக்கு ஒய்வு நாள். அன்று நானும் தலைவரும் திரைப்படம் பார்க்கச் செல்வோம். திரைப்படத்தில் அவருடைய கவனம் அதிகமாகச் செல்லுவதில்லை, வேறு ஏதாவது இலக்கியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். 30-11-47இல் அவர் எங்களோடிருந்தால் அவரையே இந்தக் காணிக்கையை அளிக்கப் பயன்படுத்திக் கொண்டோம்.

சி. ஏ. அய்யாமுத்துவின் கஞ்சன் படம்

மறுநாள் 1-12-47இல் இருவரும் கஞ்சன் படம் பார்த்தோம். எனது பெருமதிப்புக்குரிய நண்பர் கோவை சி. ஏ. அய்யாமுத்து அவர்களால் எழுதப் பெற்ற கதை அது. வசனம் பாட்டு அனைத்தையும் அவரே அருமையாக எழுதியிருந்தார். தமிழர் காட்டிலே தமிழர் ஆட்சியே தழைத்திடச் செய்யடா தமிழா ! என்று படத்திலே ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடலே மிக உணர்ச்சியோடு பாடியிருந்தார் என் அருமைத் தோழர் எம். எம், மாரியப்பா. பாட்டு மேலும் தமிழர்களுக்குத் தணிக்கொடி வேண்டு மென்றும் முழக்கி முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்ததில் தலைவருக்கும்எனக்கும் அளவற்றமகிழ்ச்சி.திரு சி.ஏ.அய்யாமுத்து அவர்களைப் பாராட்டி மறு நாள் கடிதம் எழுதினேன். கஞ்சன் படத்தில் சிறிதும் கஞ்சத்தனம் செய்யாமல் கருத்தை விளக்கமாகப் பாடல் மூலம் முக்கியதற்காக அவரைப் பாராட்டினேன்.