பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532


கிறேன். தமிழ்க் காதலை உயர்ந்த முறையில் விளக்கும் ஓர் ஒப்பற்ற நாடகமாக உயிரோவியம் அமைந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து மேடை ஒத்திகைகள் நடைபெற்றன. இலண்டன் மாநாகரத்திலிருந்து டிம்மர் செட் ஒன்று வரவழைத்திருந்தோம். எட்டு அடி சமசதுரமுள்ள ஒரு சிறிய இரும்புக் குழாய் மேடை யுடன் அது வந்திருந்தது. அதனை எவ்வாறு இயக்குவது என்பது: புரியவில்லை. எங்கள் கம்பெனி மின்சார நிபுணர் டி.வி. ஆறுமுகம் தாம் அதை இயக்குவதாகக்கூறி, சில மணி நேரங்களில் வெற்றி கரமாக இயக்கிக் காட்டினார். உயிரோவியம் நாடகத்தில் உள் நாடகக் காட்சி ஒன்று வருகிறது. துரோபதை என்னும் நாடகம் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. நாடகத்தின் லட்சிய முடி வினைச் சூசனையாகச் சுட்டிக்காட்டும் உள் நாடகம் துரோபதை. இந்த நாடகக்காட்சிக்கு அந்த எட்டடி மேடையை நல்ல முறை. யில் பயன்படுத்திக் கொண்டோம். வெளியிலுள்ள விளக்குகள் முழுவதையும் அணைத்துவிட்டு டிம்மர் செட் டின் துணையோடு: உள்மேடையில் துரோபதை நாடகம் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 14. 1. 48ல் உயிரோவியம் கோவை ஷண்முகா அரங்கில் அரங்கேறியது. கோவைக்கிழார் சி. எம். ராமச்சந்திர செட்டியார் அவர்கள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அன்றைய நாடக வசூல் ரூ. 1259. 14.0 ம். நாடக ஆசிரியர் திரு. நாரண துரைக்கண்ணன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

இரண்டாவது நாள் நடைபெற்ற நாடகத்தில் மாறுங் காட்சியின்போது எனக்கு முகத்தில் பலத்தஅடிப்பட்டது. மூக்குக் கண்ணாடிக்காக ‘பிரேம்’ மாத்திரம்போட்டிருந்தேன். அடிப்பட்ட போது அந்த பிரேம் அப்படியே என் கண்களுக்கு அடிப்பகுதியில் பதிந்து ரத்தக் காயம் உண்டாக்கி விட்டது. கண்ணாடி இருந்தால்: அது உடைந்து கண்களே. ஊறுபடுத்தியிருக்கும், ‘பிரேம்’ மட்டும் போட்டிருந்ததால் கண்கள் பிழைத்தன. எல்லோரும்: நாடகத்தால் ஏற்பட்ட கண் திருஷ்டி என்றார்கள். நாடகம் முடிந்ததும் நேராக எங்கள் நண்பர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டேன்.