பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


முறைகளில் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்கிறார்கள். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதைச் சரியானமுறையில் விளம்பரம் செய்யாவிட்டால் விலை போகாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதனால் அதைப் பொது மக்களிடையே விளம்பரப்படுத்த, இன்று மிகவும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய சினிமாசுவரொட்டி களுக்கிடையே இன்றையச் சிறிய நாடகச் சுவரொட்டிகள் மங்கி விடுகின்றன. முழுப் பக்கம், அரைப்பக்கம், கால்பக்கம் என்று சினிமா விளம்பரங்கள் வரும் பத்திரிகைகளில் ‘இஞ்சு’ க் கணக்கில் வெளியிடப்படும் நாடக விளம்பரங்கள் மக்களுக்குத் தெரிவதில்லை. இன்று நாடக உலகம் இருக்கும் நிலையில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்வது முடியாமல் இருக்கிறது. நாடகத்திற்காக ஏற்படும்செலவினங்களே அதிகமாக இருப்பதால் விளம்பரத்திற்கென்று ஒரு பெருந்தொகை ஒதுக்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இந்தக் கால நாடக விளம்பர நிலை இப்படி ....

அந்தநாளில் நாடகத்தை விளம்பரப்படுத்துவது எவ்வளவு சுலபமாக இருந்தது தெரியுமா? சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபைக்கு எழுதிய விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் மிக வேடிக்கையாக இருக்கும். ‘பிரகலாதன்’ நாடகத்திற்கு அவர் எழுதிய விளம்பரத்தாள் ஒன்று இரண்டாண்டுகளுக்கு முன்புவரை என்னிடம் இருந்தது.

“இவன் யார்? ஏன் இப்படிப் பார்க்கிறான்? வலது புறம் திரும்பும்போது கண்களில் நீர் ததும்புகிறது இடது புறம் திரும் பும்போது கண்களில் கோபாக்னி வீசுகிறதே! ....”

“ஆம், இவன் இரணியகசிபு -தன் தம்பி இரண்யாட்சன் இறந்து போன செய்தியைத் தூதர் மூலம் அறிந்து வருந்துகிறான். அதே சமயம் தன் தம்பியைக் கொன்ற மாயாவியான ஹரியைப் பழி வாங்க வேண்டுமென்ற ஆவேச உணர்ச்சியால் கோபாக்னி வீசுகிறது”