பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

551


செய்து கொள்ளும் எண்ணம் என் உள்ளத்தில் அரும்பியது. எத்தனை எத்தனையோ காதல் கதைகளை நான் படித்திருக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் இப்படியொரு காதல் கதை உருவாகுமென்று நான் எண்ணவேயில்லை.

இதயத்தில் இடம் பெற்றாள்

எங்கள் நாடகக் குழுவின் நடிகை செல்வி. சீதாலட்சுமி என் இதயத்தில் இடம் பெற்றாள். நான் அவளைக் காதலித்தேன், அவளும் என்னை நேசித்தாள். அவளேயே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன். காதலிப்பதை வேறாகவும் கல்யாணம் செய்து கொள்வதை வேறாகவும் நான் கருதவில்லை. என் எண்ணத்தை நேராக நின்று பெரியண்ணாவிடம் சொல்ல என்னல் முடியவில்லை. அதற்கான துணிவு எனக்கு ஏற்படவில்லை.

“சீதாலட்சுமியை நான் திருமணம் செய்து கொள்வதாக முடிவுசெய்திருக்கிறேன். அன்புகூர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும். அனுமதிக்க வேண்டும்.”

என்று கடிதம் எழுதினேன். பெரியண்ணாவின் கையில் கொடுத்தேன். மறுநாள் பதில் கிடைத்தது.

“உன்முடிவை நான் தடுக்கப் போவதில்லை. உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.”

என்று பெரியண்ணா எழுதியிருந்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன். சீதாலட்சுமியின் பெற்றேரின் அனுமதியைப் பெற அவர் கள் இருக்குமிடம் சென்றேன். அவளுடைய தந்தையாரைக் கண்டேன். அனுமதி வேண்டினேன். அவர் எளிதில் இசைவளிக்க வில்லை. வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.

பாசங்களுக்கிடையே மோதல்

கோவைக்குத் திரும்பியதும் பேரதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. பெரியண்ணா நாகர்கோவில் செல்ல முடிவு செய்து விட்டதாகவும், என் திருமணத்திற்கு அவர் கோவையில் இருக்க மாட்டாரென்றும் தெரிந்தது. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் நிலைமையை விளக்கி உருக்கமாக