பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

553

னையும் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லலாமென்று ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அவ்விருவரையும் அழைத்துக் கேட்டோம். நிர்வாக சிரமங்களை அறிந்தவர்களாதலால் பொறுப்பேற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தார்கள் ........ சின்னண்ணாவே எல்லாப் பொறுப்புக்களையும் துணிவோடு ஏற்றார்.

1948 ஜூன் 4 ஆம் நாள் சீதாவைத் திருமணம் செய்து கொள்ள பதிவாளர் முன்னிலையில் மனுக்கொடுத்து ரசீது பெற்றேன். அன்றிரவு எங்கள் இல்லத்தில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மணமக்களாகப் புத்தாடையுடுத்தி நாங்களிருவரும் விளக்கின் முன் அமர்ந்தோம். இறைவனை வணங்கினோம். சின்னண்ணா; மீனாட்சி அக்காள், சீதாலட்சுமியின் தாய், தந்தை, என் அன்புக்குரிய, என்னை உயிராகக் கருதும் நடிகர். தம்பி எம். கருப்பையா ஆகியோர் முன்னிலையில் என் காதலி சீதாலட்சுமிக்கு நான் மங்கலகாண் பூட்டினேன். திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மெய்தானோ?......