பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


போய்விட்டது. ஒலி பரப்பும் மைக் வந்தபின் அதைக் கேட்டுக் கேட்டு, நம் செவிகளின் வலிமையும் குறைந்து விட்டது.

திறந்த வெளி அரங்கம்

இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நாலா பக்கங்களிலுமிருந்து இரட்டை மாட்டு வண்டிகளிலும், கால் நடையிலுமாகப் பெருந் திரளாக மக்கள்வந்து கூடிவிட்டார்கள், பத்தரை மணி சுமாருக்கு நாடகம் தொடங்கியது. திறந்த வெளியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தார்கள்.

திறந்த வெளியிலே நாடக அரங்கம் அமைப்பது நமக்குப் புதிதன்று. பண்டைக் காலத்திலேயே நாடகம், நடனம், பிற கூத்து வகைகள் எல்லாம் திறந்த வெளி மேடைகளில் தாம் நடைபெற்று வந்தன. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய ஆலயங்களிலெல்லாம் விழாக் காலங்களில், அன்றும் இன்றும் கல நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திறந்த வெளிகளிலேதான் நடை பெற்று வருகின்றன. இந்தத் திறந்த வெளி அரங்குகளைத் ‘தெருக்கூத்து மேடைகள்’ என்று மக்கள் குறைவாகக் கருதி வந்தார்கள். சென்ற பல ஆண்டுகளாகத் திறந்த வெளி அரங்கின் நினைவு மாறாமல், அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் தெருக் கூத்து ஆடியவர்கள்தாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது மட்டுமன்று, பாரத விடுதலைப் போராட்டத்தில் தன்னை முதல் பலியாகக் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மணத் தமிழர் மறந்துவிடாதபடி நினைவூட்டிக் கொண்டிருந்தவர்கள், இந்தத் திறந்த வெளி மேடைகளிலே கூத்து நடத்திய கலைஞர்களே என்றால் அதுவும் நன்றியறிதலோடு ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. எனவே, திறந்த வெளி அரங்கம் புதுமை யானதன்று, பழமையெல்லாம் இன்று புதுமையாகக் கருதப் படுவதுபோலத்தான் இதையும் கொள்ளவேண்டும்.

பயங்கர அமைதி

நாடகம் நடந்து கொண்டிருந்தது. இல்லை. நாடகத்தை மக்கள் கொஞ்சங்கூட ரசித்ததாகத் தெரியவில்லை. உள்ளே இருந்தவர்கள் ஒருவருக்கொருவர்

எ நா-4