பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


பாட்டா ராமகிருஷ்ணன்

அப்போது நாடக சபையில் முக்கிய கதாநாயகனாகவிளங்கியவர் திரு டி. ஆர். ராமகிருஷ்ணன். இவர் சங்கரதாஸ் சுவாமிகளின் பேரன். இவரை நாங்கள் எல்லோரும் ‘பாட்டா’ என்றே அழைப்பது வழக்கம். சங்கரதாஸ் சுவாமிகளை நாங்கள் எல்லோரும் சுவாமி என்று கூப்பிடுவோம். இவர் சுவாமிகளின் பேரன் என்ற முறையில் அவரைப் ‘பாட்டா’ என்றே அழைப்பார். எனவே நாளடைவில் இவரையே நாங்கள் ‘பாட்டா’ என்று கூப்பிடத் தொடங்கி விட்டோம். பாட்டா என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. சுவாமிகளும் இவரைப் பாட்டா என்றே கூப்பிடுவார்.

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் பாட்டா இராம கிருஷ்ணன் சத்தியவானாகத் திறம்படப் பாடி நடிப்பார்.

சாரீரம் கணிரென்றிருக்கும். சீமந்தனி நாடகத்தில் சந்திராங்கதனுகவும், அபிமன்யு சுந்தரியில் அரவானுகவும், சுலோசன சதியில் ஆதிசேடனுகவும் நடிப்பார். ஆண் வேடத்தில் எப்படித் திறமையாக நடிப்பாரோ அப்படியே பெண் வேடத்திலும் பெயர் பெற்றவர். பவளக்கொடியில் அல்லியாகவும், சதியனுசூயாவில் அனுசூயாவாகவும் தோன்றுவார்.

1922-இல் நாடக சபை திண்டிவனத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது, இவர் கம்பெனியிலிருந்து விலக நேர்ந்தது. அதன் பிறகு பல நாடக சபைகளில் பணி புரிந்திருக்கிறார், ஸ்பெஷல் நாடக நடிகராக இலங்கையில் சில ஆண்டுகள் இருந்து, இறுதியாக நாடகத்துறையை விட்டே விலகி, இப்போது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து வருகிறார்.

பெரியண்ணா டி. கே. சங்கரன்

என் மூத்த அண்ணா டி. கே. சங்கரன் நாடக சபையில் மற்றொரு கதாநாயகனாக விளங்கினார். ‘சுலோசன சதி’ நாடகத்தில் அண்ணாதான் இந்திரஜித்துவாக நடிப்பார். சாரீரம் கெம்பீரமாக இருக்கும். வசனங்களைத் தெளிவாகப் பேசுவதில் இவருக்கு ஒரு தனித் திறமை இருந்தது. சுலோசனையை இந்திர