பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


நான் முடி சூட்டிக் கொண்ட நிலையில் அப்படியே சிம்மாதானத் தில் வீற்றிருந்தேன். அன்று எனக்கும் இரண்டு தங்கப் பதக் கங்கள் பரிசாகக் கிடைத்தமையால் உற்சாகத்தோடு உட்கார்ந்திருந்தேன்.

என் தந்தையார் பின்பாட்டுப் பாடும் இடத்திலிருந்து உட்புறத் தட்டிக்குப் பக்கத்தில் வந்து, ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். நான் தற்செயலாகத் தந்தையைப் பார்த் தேன். அவரது சைகையால் என்னைச் சிம்மாதனத்தின் கீழ்ப்படி யில் இறங்கி உட்காரச் சொல்கிரு ரென்பது புரிந்தது. காரணம் புரியாத நிலையில், நான் அவர் சொன்னபடி இருந்த இடத்தி லிருந்து ஒருபடி இறங்கி உட்கார்ந்தேன்.

அவ்வளவுதான். அடுத்த விநாடியில் என் தலைக்குமேல் கட்டப்பட்டிருந்த தர்பார் திரை அப்படியே சுருணையோடு ‘தடா’ ரென்ற சத்தத்துடன் விழுந்தது. என்மேல் விழவில்லை என்றாலும் அது விழுந்த அதிர்ச்சியால் நான் சுருண்டு விழுந்தேன் உள்ளே நின்ற தந்தையார் ஓடி வந்து, என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டார்.

ஒரு படி நான் கீழே இறங்கி உட்கார்ந்திராவிட்டால் என் வாழ்நாள் அன்றே முடிந்திருக்கும். தெய்வத்தின் திருவுள்ளம் வேறு விதமாக இருந்ததால் பிழைத்தேன். ஏதோ தற்செயலாக நான் கீழ்படியில் உட்கார்ந்ததாக எண்ணி, சுவாமிகள் ஆனந்தக் கண்ணிர் சிந்தி, என்னை வாழ்த்தினார் தெய்வம், தந்தையார் உருவத்தில் நின்று, என்னைக் காத்ததை அறிந்தபோது எல்லோரும் அதிசயித்தனார்.

என் தலைக்கு நேராகக் காட்சி அமைப்பாளர் ஒருவர், சுருணையோடு திரையைக் கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த என் தந்தையார் ஏதோ எண்ணி, என்னைக் கீழிறங்குமாறு செய்தார் என்பதைப் பின்னல் அறிந்தேன். சில நிமிடங்களில் பரண் மீதிருந்து கீழிறங்கி வந்த காட்சியமைப்பாளர் திரு ராமசாமி என்னைக் கட்டியணைத்துக் கொண்டு, “மறு பிறவி எடுத்தாயே அப்பா” என்று கதறியழுத காட்சி, இன்றும் என் மனக் கண் முன்னால் நிற்கிறது.