பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மதுரை மாரியப்ப சுவாமிகள்

பிரபல தமிழிசைப் பாடகர், மதுரை மாரியப் பசுவாமிகளை நாங்கள் முதன்முதலாகப் புதியம்புத்துாரில்தான் சந்தித்தோம். அவர் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்குமுன், தாமே நாக்கை அறுத்துக் கொண்டாரென்றும், முருகன் திருவருளால் நல்ல பாடல்களை இயற்றும் திறனுடையவராய் விளங்குகிறாரென்றும் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். திரு மாரியப்ப சுவாமிகள் திருச்செந்துTர் முருகனுக்குப் பால்காவடிப்பிரார்த்தனை செலுத்துவதற்காக, சுவாமிகளிடம் பொருளுதவிபெற வந்திருந்தார்.

மாரியப்ப சுவாமிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் சிறந்த மாணாக்கர்களிலே ஒருவர். சுவாமிகளின் சமரச சன்மார்க்க நாடக சபையில் பிரதம நடிகராக விளங்கியவர். சங்கீத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ் ஜி கிட்டப்பாவும், அவரது சகோதரர்களும் சுவாமிகளின் மாணாக்கர்களாக, இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்தாம்.

“என்ன மாரியப்பா! பாடல்கள் எழுதுகிறாயாமே? எங்கே நீ எழுதின பாடல்களைப் பாடு. கேட்போம்” என்றார் சுவாமிகள். மாரியப்ப சுவாமிகள் பாடத் தொடங்கினார். கடைசி அடியைப் பாடும்போது ஏதோ சிறிது தயக்கத்துடன் நிறுத்தினார். உடனே சுவாமிகள், “என்னடா, அப்பன் மாரியப்பன் என்று முத்திரை பாடி வைத்திருக்கிறாயா? பாதகமில்லை, பாடு” என்றார். எங்களுக்கெல்லாம் பெரும் வியப்பாகப் போய்விட்டது, சுவாமிகள் கூறியபடியேதான் அந்தப் பாடலின் அடி அமைக்கப்பட்டிருந்தது. சுவாமிகள் துவக்க முதலே தமது பெயரை முத்திரையடியாக வைத்துப் பாடும் வழக்கமில்லாதவர். எனவே மாரியப்ப சுவாமி