பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


சேர்ந்தவை. எட்டையபுரத்தை ஆண்டு வந்தவர் ராஜா ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பன் அவர்கள். ராஜா எம். ஆர். கோவிந்தசாமிப்பிள்ளை எட்டையபுரம் மன்னரின் செல்லப்பிள்ளையாக விளங்கினார். அவர் மேடையில் புனைந்து வந்த ராஜ உடைகளெல்லாம் மன்னரால் பரிசளிக்கப்பெற்றவை யெனத் தந்தையார் மூலம் அறிந்தோம். எங்கள் தந்தையார் அவரோடும் பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்தவராதலால் எம். ஆர். எங்களை அன்புடன் வரவேற்றார், வெளியே நெருக்கடியான கூட்டம், நாங்கள் மேடையிலேயே ஒரு பகுதியில் உட்கார்ந்து நாடகம் பார்த்தோம். நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் எம். ஆர். எங்களை விட வில்லை. தந்தையாரும் அவரும் நீண்ட நேரம் பழங் கதைகளை யெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் உறங்கி விட்டோம். பொழுது புலர்ந்ததும் வண்டியேறி முடிமன்னுக்கு வந்து சேர்ந்தோம்.