பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84


பிறகு தந்தையார். “இது மின்சாரத்தால் ஒடும் டிராம் கார்” என்று அதைப் பற்றி விளக்கியபோது, புரிந்துகொண்டது போல் தலையசைத்தோம். வேறென்ன செய்வது? மின்சாரம் என்றாலே என்னவென்று புரியாத எங்களிடத்தில் மின்சார வண்டியைப் பற்றிச் சொன்னல் எப்படிப் புரியும்?

மனிதர்கள் வண்டியிழுப்பதை நான் அதுவரையில் பார்த்ததில்லை. மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் இழுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். நாகரீகம் மிகுந்த பெரிய பட்டினத்தில் மனிதர்கள் இழுக்கும் ரியக்‌ஷா’ வண்டிகளைப் பார்த்தபோது அந்தச் சின்னஞ்சிறு வயதிலே கூட எனக்குக் கஷ்டமாகத்தானிருந்தது. இந்த அதிசயங்களேயெல்லாம் பார்த்துக்கொண்டே ‘கிராண்ட் தியேட்ட'ருக்கு வந்து சேர்ந்தோம்.

கிராண்ட் தியேட்டர்

சென்னையில் இப்போது முருகன் டாக்கீஸ் என்ற பெயரால் பட மாளிகை ஒன்று இருக்கிறதல்லவா? அதே கொட்டகைதான் அப்போது கிராண்ட் தியேட்டராக விளங்கியது. நாங்கள் வந்து இறங்கியது காலை நேரமானதால் எல்லோரும் பல் துலக்கிக் கொண்டு சிற்றுண்டியருந்த மேடையில் உட்கார்ந்தோம். எல்லோருக்கும் பூரி மசால் பரிமாறப் பட்டது. நான் அதுவரை யில் பார்த்தறியாத புதிய உணவு பூரி. இட்டளி, தோசை, புட்டு, இடியாப்பம், முதலிய பலகாரங்களையே சாப்பிட்டு வந்த எனக்கு, பூரி. மசால் என்னவோ போலிருந்தது. அது வட இந்தியாவில் பிரசித்தமான உணவு என்று சொன்னார்கள். எனககுப் பிடிக்கவில்லை. பிறகு தந்தையார் இட்டளி வர வழைத்துக் கொடுத்தார்.

சிற்றுண்டி முடிந்ததும் கம்பெனியார் அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நாங்கள் பெற்றோருடன் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் குடியேறினோம்.

ஞாயிற்றுக்கிழமை நாடகம்

கிராண்ட் தியேட்டரில் நாடகம் தொடங்கியது. முதல் நாளன்றே கூட்டம் குறைவாக இருந்தது. அதுவரையில்