பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


கியாஸ் விளக்குகளில் நாடகம் நடித்து வந்த நாங்கள் அன்று தான் முதன் முதலாக மின்சார விளக்கில் நாடகம் ஆடினோம். என்றாலும், வசூல் இல்லாததால் எங்களுக்கு உற்சாகம் ஏற்பட வில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நாடகம் என்றதும் எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதற்குமுன் எந்த ஊரிலும் ஞாயிறன்று நாடகம் போட்டதில்லை. அதுவும் மாலை நேரத்தில் நடித்ததேயில்லை. செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இரவு 6.30 மணிக்கு நாடகம். ஆக வாரத்திற்கு மூன்று நாடகம் என்றிருந்தது போய் சென்னைக்கு வந்தபின் வாரத்திற்கு நான்கு நாடகங்கள் ஆயின. ஞாயிற்றுக்கிழமை நடந்த மாலை நாடகத்துக்கு வசூலும் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சென்னையில் வசூலாகும் என எங்கள் தந்தையார் கூறினார்.

நோயும் சிகிச்சையும்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. நானும் என் தமையன் மார்களும் நோயில் படுத்தோம். சென்னைக்குப் புதிதாக வருபவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் காய்ச்சல் வருவது வழக்கமாம். அந்தக் காய்ச்சல் எங்களையும் பீடித்ததால் மிகவும் தொல்லைப் பட்டோம்.

இது ஒரு புது விதமான காய்ச்சல். நாடகம் நடந்த செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்தான் இந்தக் காய்ச்சல் எங்களை அதிகமாகப் பீடித்தது. முறை ஜூரம் என்றார்கள் சிலர்: மலைரியா ஜுரம் என்றார்கள் வேறு சிலர். பகல் உணவு அருந்தும் வரையில் ஒன்றும் இருப்பதில்லை. பிற்பகல் மூன்று மணிக்குமேல் சகிக்க முடியாதபடி குளிர் எடுக்கும். ஒரு மணி நேரத்திற்குப் பின் காய்ச்சல் அடிக்கும். மறுநாள் காய்ச்சல் விட்டுவிடும்.

அண்டை அயலில் இருந்தவர்கள் சொல்லிய மருந்துகளை யெல்லாம் எங்கள் அன்னையார் கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. எங்கள் தாயார் இக்காலத்துப் பெண்டிரைப் போன்றவர்கள் அல்லர். எடுத்ததற்கெல்லாம் டாக்டரைத் தேடியோடும் நிலையில் அவர் எங்களை வளர்க்கவில்லை குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களும், அதற்குரிய மருத்துவ