பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


சொந்தக்காரராக இருந்தவர் திரு க. மாணிக்க முதலியார். இவரைக் கழுதை மாணிக்க முதலியார் என்றே இரசிகர்கள் கூப்பிடு வார்கள். இவர் அந்த நாளில் ஒரு சிறந்த ‘ராஜபார்ட்'டாக விளங்கினார். இவருடைய நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். வடபகுதி மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற நடிகர் இவர். நன்றாகப் பாடக் கூடியவர். பெயருக்குமுன் வந்த தலையெழுத்து ‘க’ வாக இருந்ததால் குறும்புத்தனமான இரசிகர்கள் இவருக்கு கழுதை மாணிக்கம் என்ற ப்ட்டத்தைச் சூட்டி விட்டார்கள்.

மறக்க முடியாத மசால்வடை

சென்னைக்கு வந்தபின் நாடகத்தின் நடுவில் சில நிமிடங்கள் இடைவேளை விடுவது வழக்கமாகி விட்டது. வேலூரில் அந்த வழக்கம் தொடர்ந்தது. இடைவேளைக்காக கொட்டகைக்கு உள்ளேயிருந்த சிறிய ஒட்டலில் உப்புமா, மசால்வடை போடுவார்கள். மிக அற்புதமாக இருக்கும். மறக்கமுடியாத மசால் வடை. எங்கள் தந்தையார் வாங்கிக்கொண்டு வந்து அன்போடு கொடுப்பார். அந்த மசால் வடையின் சுவை இன்னும் நினைவை விட்டு அகலவில்லை.

வேலூருக்கு வந்த பின்னும் எங்கள் காய்ச்சலுக்கு விடிவு ஏற்படவில்லை. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தது.

வள்ளி திருமணம்

ஒரு நாள் வள்ளி திருமணம். சின்னண்ணா வள்ளி வேடம் தாங்குவது வழக்கம். இரண்டு நாட்களாக அண்ணாவுக்குக் கடுமையான காய்ச்சல். வேறு நடிகர் இல்லாததால் முதல்நாள் காய்ச்சலோடு நடித்தார். வள்ளி திருமணத்தன்று அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை . இரவுக்குள் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையோடு ஏதேதோ வைத்தியம் செய்தார்கள்.

இரவு மணி எட்டு. வழக்கம்போல் எல்லோரும் வேடம் புனைவதற்காகக் கொட்டகைக்கு வந்துவிட்டோம். 9.30 மணிக்கு நாடகம் தொடங்க வேண்டும். முதலாளிகளும் எங்கள் தந்தை யாரும் சின்னண்ணாவைச் சுற்றி உட்கார்ந்திருக்கிறார்கள்.