பக்கம்:எனது பூங்கா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

கொண்டிருப்பவை. எந்த ஜீவராசியிடம் மலர்ச்சி என்ப தில்லையோ அந்த ஜீவராசி அழிந்தேபோகும். அது ஒரு காரணம் தமிழர்கள் தங்களை அறியாமலே மலர்களைக் கண்டு மயங்கி நிற்பதற்கு.

 என்னிடம் ஒரு தொட்டி மட்டுமே இருக்கும் என்று என் நண்பர்கள் கேலிசெய்வார்கள் என்றேன்.  அப்படிக் கேலிசெய்தாலும் அதனால் பாதகமில்லை. அழகான பூக் களைத்தரக்கூடிய ஒரு செடியேனும் வைத்திருக்கும் நான் அதுகூட இல்லாதவர்களை விட ஓராயிரம் மடங்கு அதிகப் பேறுடையவனே ஆவேன். மலர்களால் அடையும் இன் பத்தை எழுதிக்காட்ட முடியாது துய்த்துத்தான் அறிய முடியும். வெளியேபோய் வேலைசெய்துவிட்டுச் சோர்ந்து போய் வீட்டுக்கு வருகிரறோம். நம்முடைய குழந்தை சிரித் துக்கொண்டு ஓடிவந்து நம்மைக் கட்டிக்கொள்கிறது. அப் போது நம்முடைய சோர்வு எங்கே? போன இடம் யாருக் கும் தெரியாது. குழந்தையின் மலர்முகம் கண்டதும் சோர்ந்து குவிய ஆரம்பித்துக்கொண்டிருந்த நம்முடைய முகமும் சூரியனைக்கண்ட தாமரை போலவும் சந்திரனைக் கண்ட குமுதம் போலவும் மலர ஆரம்பித்துவிடுகிறது. நரையும் திரையுமுள்ள கிழட்டு முகம்கூட ஒளிபொருந்திய தாக ஆகிவிடுகிறது.
 நாம் வீட்டுக்கு வந்ததும் குழந்தை வரவேண்டாம். நம்மை வரவேற்கத் தொட்டியிலுள்ள செடியில் பூத்து நிற்கும் மலர்போதும். அதைக் கண்டதும் குழந்தையைக் கண்ட முகம் மலர்ந்ததுபோலவே மலர்ந்துவிடுகிறது. சோர் வும் மறைந்துவிடுகிறது. இதை அனுபவித்துப் பார்க்கும் படி என் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

—11—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/10&oldid=1298931" இலிருந்து மீள்விக்கப்பட்டது