பக்கம்:எனது பூங்கா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவன் அமரன் ?


ஆனால் இதென்ன? அவர் பதில் கூறாமல் இருக்கிறார்; அவருடைய கண்கள் சிவக்கின்றன; அவருடைய புருவங்கள் தெரிகின்றன. அகற்குக் காரணமா? அவர் தம்முடைய பெயரைப் பார்த்துவிட்டார். அந்தப் பாடல்கள் தம்மைப் பற்றினவையே என்று கண்டு விட்டார்.அதுதான்.

அதனால் கடுதாசி கொண்டு வந்த வேலைக்காரனைப் பார்த்து, "அடா போக்கிரிப்பயலே! ஆகட்டும்; உன்னைத் தூணில் கட்டி வைத்து உரிக்கச் சொல்லுகிறேன். அந்தக் கடுதாசியில் எழுதியிருப்பதை வாசிக்கவில்லையோ ? அப் படியா சொல்லுகிறாய் ஆகட்டும் " என்று கூப்பாடுபோட்டார்.

அந்த வேலைக்காரன்-பாவம்,-அவனுக்கு ஒன்றுமே தெரியாது. சுத்த நிரட்சரகுட்சி. அவன் என்ன செய்வான்? அங்கு நில்லாமல் ' பிழைத்தேன், பிழைத்தேன் " என்று ஓடிப்போனான்.

அதன்பின் ஜமீந்தார் அந்தக் கடுதாசியிலுள்ள விஷயத்தை மனைவியிடம் கூறினார். அந்தப் பாடல்களைப் பாடி யவன் எவனாயிருக்கும் என்ற யோசித்தார்கள்.

"ஆமாம். அன்று அடித் தண்டனைபட்ட அந்தப் போக்கிரிப் பயல்தான் ;அதில் சந்தேகமில்லை. அவன்தான் ஏதோ சில பாடல்கள் எழுதியிருப்பதாக அன்று மானேஜர் ஜான் கூறினர் அல்லவா? ஆகட்டும் அந்தப் பயலுடைய காதுகளை அறுத்தெறிந்து விடுகிறேன். பார்.” என்று ஜமீந்தார் கூறினார். அப்போது அவருடைய மனைவி

—98–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/100&oldid=1392022" இலிருந்து மீள்விக்கப்பட்டது