பக்கம்:எனது பூங்கா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவன் அமரன்?



சேர்ந்ததும் அதிர்ஷ்டத்தைக் காணவில்லை; அதற்குப் பதிலாக மகா கஷ்டத்தையே கண்டான்.

அங்கு மிங்குமாகப் பல நாட்கள் வேலே தேடி அலைந்தான். அக்காலத்தில் இளைஞர்கள் நாடகக் கொட்டகைக்குக் குதிரை மீது சவாரி செய்த போவது வழக்கம். அவர்கள் கொட்டகைக்குள் போய்விட்டால், அவர்களுடைய குதிரைகளைப் பார்த்தக் கொள்வதற்கு வேலையாட்கள் தேவை. அந்தப் பதவி கிடைத்தது ஸ்ட்ராட் போர்ட்டிலிருந்து வந்த இளைஞனுக்கு அவன் தன்னுடைய வேலையில் அதிக கவனமாகவும் வினயமாகவும் கடந்து கொண்டதைக்கண்டு எல்லோரும் அவனையே விரும்பினார்கள். அதனாளல் அவன் பல சிறுவர்களைத் தன்கீழ் வேலைபார்க்குமாறு நியமித்துக் கொண்டு, குதிரை பிடித்து நிற்கும் தொழிலைப் பிரமாதமாகச் செய்து வந்தான்.

அந்தத் தொழிலச் செய்யும் பொழுதே அடிக்கடி கொட்டகைக்குள் போய் நாடகங்களைப் பார்த்து வந்தான். அதனால் தானும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாக ஆரம்பித்தது. ஆதலால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டான். அதன்பின் தன்னுடன் நடிக்கும் நண்பர்களுக்காக அவனே சில நாடகங்களை எழுதவும் ஆரம்பித்தான். அந்த நாடகங்கள் ஜனங்களின் மனத்தை எளிதில் கவர்ந்துவிடவே அவனுக்குப் பேரும் பொருளும்.அதிகரிக்கலாயின. ஆதலால் அவன் பத்து வருவுங்கள் கழித்துத் தன்னுடைய செந்த ஊருக்குப் போன பொழுது அவனே எல்லோரும் சந்தோஷமாகவும் சம்பிரமமாகவும் வரவேற்றார்கள். "ஆகா, இந்தக் கவிஞன்தானே ஜமீன்தார் மீது

—100–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/102&oldid=1391674" இலிருந்து மீள்விக்கப்பட்டது