பக்கம்:எனது பூங்கா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்கல்வி


ஆசிரியை அம்மையார் காதில் கம்மலும் தொங்கட்டானும், கழுத்தில் சங்கிலிகளும், கையில் வளையல்களும் அணிந்திருக்கிறார். மூக்கில் மூக்குத்தி-சில சமயங்களில் நாலைந்து வைரக் கற்கள் பதித்த பேஸரி என்னும் விசிரிமூக்குத்தியை அணிந்து கொண்டு அந்தச் செய்யுளை எப்படிக் குழத்தைகளுக்குக் கற்பிக்க முடியும். அல்லது அவருக்குக் குருமகுருபரர் கூறுவதில் நம்பிக்கையில்லேயா? கைதான் அழகு செய்யும், கல்வி அழகு செய்யாது என்று எண்ணுகிறாரா?

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

என்ற குறளை அவர் மறந்து விட்டாரோ? அன்றி அதுவும் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று எண்ணி விட்டாரோ? கல்வியில்லாத பெண்கள் முகத்தில் காணப்படாமல் கல்விகற்றவர் முகத்தில் மட்டும் காணப்படும் தேஜசை விசேஷ தேஜசை - ஒளியை அவர் காணவில்லையோ? அந்த ஒளியே அவருக்கு அழகு தரும் என்பதை அறியாரோ?

இவர் அந்தச் செய்யுளைக் கற்றுக் கொடுத்தால் நம்முடைய பெண்கள் நகைகளை விரும்புவதில் ஆச்சரியம் யாது? அம்மா அந்தச் செய்யுளைப் பார்த்தாயா என்று கேட்டால் ஆமாம் பார்த்தேன், படித்தேன். ஆனால் அதைக் கற்றுக் கொடுத்த எங்கள் ஆசிரியை நகைகளை அணியவில்லையோ என்று கேட்டு நம்மை மடக்கிவிடுகிறார்கள்? ஆசிரியை கூறுவதுதான் நம் பெண்களுக்கு வேதமாகுமா?

ー103ー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/105&oldid=1392257" இலிருந்து மீள்விக்கப்பட்டது