பக்கம்:எனது பூங்கா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கல்வி



லுள்ள ஜீவசத்துக்கள் வீணாகப்போகாதபடி வேகவைப்பதற்குக் கற்றுக்கொடுக்கிறார்களா ? பாலையும் நீரையும் விஞ்ஞான முறையில் காய்ச்சுவதற்குக் கற்றுக்கொடுக்கிறார்களா? இத்தகைய விஷயங்களை அவர்கள் கனவிலும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. நமக்குச் சோறும் குழம்பும் எதற்கு? பட்சணங்களும் பலகாரங்களும் சாப்பிட்டால் போதாதா ? அவற்றைச் செய்யவே கற்றுக்கொடுக்கிறார்கள். சரி, அதுதான் போகட்டும், அப்படியானால் சோற்றுக்கு அடுத்தபடியாக நாம் உபயோகிக்கும் தோசையும் இட்லியும் வார்க்கக் கற்றுக்கொடுக்கலாமே. அதுவுமில்லை. அவர்கள் கற்றுக்கொடுப்பதெல்லாம் மைசூர்பாகு, சேமியாபோன்ற ஆடம்பரமான அனாவசியமான ஐஸ்வர்யவான்களே செய்யக்கூடிய பலகாரங்களையே செய்வதற்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். இத்தகைய வீட்டு விஞ்ஞானம் ஏழைகளாகிய நம்முடைய பெண்களுக்கு அவசியமா என்பது என்னுடைய இரண்டாவது சந்தேகம்.

நான் நாள்தோறும் என்னுடையக் காரியாலயத்திற்கு பஸ்ஸில் போகிறேன். அப்பொழுது பல கல்லூரி மாணவிகள் பிரயாணம் செய்வதைப் பார்க்கிறேன். நம்முடைய பெண்ணும் இன்னும் சில வருஷங்களில் இவர்களைப் போல் கல்லூரியில் சேர்ந்து படிப்பாள் அல்லவா என்று எண்ணுவேன். அதனால் அவர்களுடைய நடை உடைபாவனைகளைக் கவனிக்க வேண்டியவனாகின்றேன். இரண்டொன்று இங்கு கூறுகின்றேன். இந்த மாணவிகள் பலவிதமான சீலைகள் அணிந்திருக்கிறார்கள். நகைகள் அணிவதற்கும் அலங்காரமான சீலைகள் அணிவதற்கும் வித்தியாசம் என்ன? குமரகுருபரர் செய்யுள் இதற்கும் பொருந்துவது

—105–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/107&oldid=1392262" இலிருந்து மீள்விக்கப்பட்டது