பக்கம்:எனது பூங்கா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கல்வி



தானே? அவர் நகை என்று குறிப்பிட்டது வெறும் அலங்காரத்தைத்தானே? கல்வி ஒளி உள்ளவர்களுக்கு இந்த வேஷங்கள் எதற்கு ? இவர்கள் அலங்காரம் செய்வதால் தங்கள் கல்விக்கு இழுக்குத் தேடியவ்ர்கள் ஆகமாட்டார்களா ? இவர்கள் அலங்காாம் ஏழைகள் மனத்தில் அழுக்காறு உண்டாக்கி அவரைத் துன்புறுத்துவது அழகாகுமா ? இவ்வாறு என் மனம் எண்ணுகிறது.

இத்துடன் நிற்கவில்லை. இவர்கள் அலங்காரமான சீலைகள் அணிந்திருப்பதுபோலவே அலங்காரமான செருப்புக்களும் அணிந்திருக்கிறார்கள். சிலர் ஆங்கிலப் பெண்கள் போல் குதிக்கால் மூன்று அங்குல உயரமுள்ள ஜோடுகளையும் அணிகிறார்கள். செருப்பும் ஜோடும் அணியட்டும் அது நல்ல வழக்கமே. பாதங்கள் சுத்தமாயிருக்கும். சாலையிலுள்ள ஆபாசங்கள் சேரா. ஆனால் இந்தப் பெண்கள் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் பொழுது இவர்களுடைய சீலைகள் எல்லோரும் மிதிக்கும் பலகையில் தொங்கிப்புரள்கின்றனவே. அது சரியா? அது அசுத்தமல்லவா? அதைச் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்கிறார்களா? சில சமயங்களில் உட்கார இடமில்லாமல் நிற்பவர்கள் சீலைகளின் மீது மிதித்துக் கொண்டு நிற்கிறார்கள் அல்லவா? அதையேனும் எண்ணிப் பார்க்கிறார்களா? எதற்காக இப்படிக் கீழே புரள விடுகிறார்கள்? இவர்களுடைய பாதங்களை யாரும் பார்க்கக்கூடாது என்ற எண்ணமா? அந்த எண்ணத்துக்குக் காரணம் யாது? இவர்கள் பாதங்கள் அழகாக இல்லையா? சீதையின் அழகை வர்ணிக்கும்பொழுது அவளுடைய பாதங்களின் அழகையும் வர்ணிக்கவில்லையா?

—106—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/108&oldid=1392271" இலிருந்து மீள்விக்கப்பட்டது