பக்கம்:எனது பூங்கா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ருஷிய நாட்டில் காதைரைன் என்ற சக்ரவர்த்தினி அரசாண்டு கொண் டிருந்தாள். ஒருநாள் அதிகாலையில் எழுந்ததும் சாளரத் தின் வழியே வெளியே பார்த்தாள். அந்த மைதானம் வெட்டவெளியாக இருந்தது. ஆனால், அதன் நடுவில் ஏதோ ஒரு சிறு காட்டுச்செடி பூத்து நின்றுகொண்டிருந் த்து. யாரும் தீண்டாத செடி. அற்புதமான மலர். ஆயினும் அந்தப் புல்வெளிக்கு அதுவே ஒளி தந்துகொண்டிருந்தது. அதைக்கண்ட அரசி அந்த அற்புதக் காட்சியில் சொக்கிப் போய்விட்டாள். உடனே அரண்மனை அதிகாரியைக் கூப்பிட்டு யாரும் அந்தச் செடியைப் பிடுங்கவோ அதி லுள்ள மலர்களைப் பறிக்கவோ செய்யாதிருக்குமாறு ஒரு காவற் சேவகனை அதன் அருகே நிறுத்திவைக்குமாறு பணித்தாள். இதையெல்லாம் அனுபவம் மூலம் அறிய லாமே யன்றிப் பிறர் சொல்லி அறியமுடியாது.
 ஆகையால் என்னிடம் உள்ளது ஒரு சிறு தொட்டியும் அதிலுள்ள ஒரு அற்பச் செடியுமாகவே இருந்தாலும் அது என் பூங்காதான். அந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி தான். அதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் என் னிடம் பூந்தொட்டிப் பூங்காதான் உண்டு என்று எண்ணி விடவேண்டாம். என்னிடம் ஒரு பூங்காவன்று, அநேக பூங்காக்கள் உள. இந்த ஊரில் மட்டும் அன்று. நான் போகும் ஊர்களில் எல்லாம் உள. இந்த ஊரில் உன் னுடைய பூங்காக்கள் எவை என்று கேட்பீர்களோ ? முத லாவதாக நான் வசிக்கும் தியாகராயநகரில் என் வீட்டின் அருகே உள்ள பனகால் பார்க் என்னும் பூங்கா எனக்குச் சொந்தமல்லவோ?

—12–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/11&oldid=1298940" இலிருந்து மீள்விக்கப்பட்டது