பக்கம்:எனது பூங்கா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கல்வி


பாத மீசை இவர்கட்க்கு அரும்பக் காரணம் என்ன? பிற நாட்டுப் பெண்கள் அதிலும் முக்கியமாக வெள்ளைக்காரப் பெண்களைப் பார்த்தால் காரணம் விளங்கிவிடும். அவர்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதில்லை. பவுடரே பூசுகிறார்கள். அதுதான் காரணம். மஞ்சள் பூசினால் இதழில் உரோமம் உண்டாகமாட்டாது. ஆனால் நம்முடைய கல்லூரி மாணவிகள் நாகரீகம் அடைந்தவர்கள், பழைய பசலியான தங்கள் தாய்மார்போல் நம்நாட்டு மஞ்சளை உபயோகிக்கலாமா. நாகரீகம் முதிர்ந்த அயல்நாட்டுப் பவுடரையல்லவா உபயோகிக்க வேண்டும்? அப்படி அவர்கள் உபயோகிக்கும் பவுடரில் என்ன வஸ்துக்கள் சேர்ந்துள என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா, அதுவும் தெரியாது. அவர்களுக்கும் தெரியாது அதை உபயோகிக்குமாறு உபதேசம் செய்யும் டாக்டர்களுக்கும் தெரியாது. பவுடர் நல்லது நாகரீகமானது அதுபோதும் அவர்களுக்கு.

அது போதாது. நவநாகரிகம் மிகுந்ததாகக் கூறப்படும் அமரிக்க நாட்டில் வழங்கும் கிராம்டன் என்சைக்ளோபீடியா என்னும் சிறந்த கலைக்களஞ்சியம் கூறுவதைக் கேளுங்கள்:

"பவுடர், கிரீம் முதலியவைகளைக்கொண்டு அழகை உண்டாக்கிவிடலாம் என்னும் மூடநம்பிக்கைக்குக் காரணம் விளம்பரம் செய்வோருடைய சாமார்த்தியமேயாகும். முகத்திலிடும் பவுடர் எல்லாம் தானிய மாவினாலோ அல்லது கற்சட்டி மாவினாலோ செய்யப்பட்டதாகும். இப்படி உபயோகிக்கும் வஸ்துக்களில் சில விஷத்தன்மையுடையனவாகக்கூட இருக்கும். உண்மையான அழகு சுத்தத்தாலும் சுகத்தாலுமேதான் உண்டாகும்."

—★—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/110&oldid=1392281" இலிருந்து மீள்விக்கப்பட்டது