பக்கம்:எனது பூங்கா.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அதிர்ஷ்டம்


அண்ணா செந்தாமரையிலுள்ள திருமகள் கூடச் சீதைக்கு நிகராக மாட்டாள். அங்ஙனமிருக்க நான் அவளை எவ்வாறு வர்ணிக்க இயலும். ஆயினும் எனக்குத் தெரிந்த அளவு இயம்புகிறேன்.

மிஞ்சொக்கும் அளக ஓதி
        மழையொக்கும் வடித்த கூந்தல் ;
பஞ்சொக்கும் செய்ய

        பவளத்தின் விரல்கள். ஐய

அண்ணா அவளுடைய கூந்தல் கார்மேகம் போன்றது. அவளுடைய பாத விரல்கள் செம்பவளம் போன்றன-என்று கூறுகின்றாள்.

இவ்வாறு சூர்ப்பனகை சீதையின் பாதங்களை இராவணனிடம் வர்ணித்துக்கூறுகிறாளே, சீதையும் இக்கல்லூரி யுவதிகள் செய்வதுபோல் பாதங்களை மறைத்து வைத்திருந்தால் சூர்ப்பனகை வர்ணிக்க முடியாதல்லவா?

சுக்கிரீவன் சீதா பிராட்டியைத் தேடும் பொருட்டு வானர வீரர்களை அனுப்பிய காலத்தில் இவள்தான் சீதை என்று அனுமன் அறிந்து கொள்வதற்கு அநுகூலமாக இராமன் அனுமானைத் தனியாக அழைத்துச் சிதையின் உருவத்தை வர்ணிக்கிறான்

அப்போது அவன் முதன் முதலாகச் சொல்லுவது சீதையின் பாதங்களைப் பற்றியேயாகும்.

பாற்கடல் பிறந்த செய்ய

      பவளத்தைப் பஞ்சி யூட்டி

—113—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/115&oldid=1392368" இலிருந்து மீள்விக்கப்பட்டது