பக்கம்:எனது பூங்கா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அதிர்ஷ்டம்




மேற்பட மதியம் சூட்டி

       விளங்குற நிரைத்த மெய்ய கால்த்தகை விரல்கள் ஐய......

அப்பா அனுமா! சீதையினுடைய பாதங்கள் செம்பஞ்சு ஊட்டியிருக்கும். அதிலுள்ள விரல்களில் சந்திரர்கள் என்னும் நகை அணிந்திருக்கும் என்று இராமன் கூறுகிறான்.

இராமன் இவ்வாறு சீதையின் பாதங்களை வர்ணித்தாலும், சீதை தன்னுடைய பாதங்களை சீலையைக்கொண்டு மூடியிருந்தாளானால் அந்த வர்ணனை அனுமனுக்கு அணுவளவும் பயன்படாதன்றோ?

இங்ஙனம் நம் நாட்டுப் பெண்கள் தம் எழில் மிகுந்த பாதங்களை எல்லோரும் பார்க்குமாறு நடந்து கொண்டு வந்திருக்க, இக்காலத்துத் தமிழ் அரசிகள் மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளக் காரணம் யாது? அவர்களுடைய பாதங்கள் அழகாக இலவா? அல்லது அதில் நோயோ பழுதோ யாதேனும் ஏற்பட்டுளவா? எனக்கு ஒன்றும் விளங்குவதாயில்லை. என்னுடைய இந்த ஐயத்தைத் தீர்த்து வைக்குமாறு வாசகர்களை வேண்டுகின்றேன்.

一]★ [一 --- 1 14--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/116&oldid=1392370" இலிருந்து மீள்விக்கப்பட்டது