பக்கம்:எனது பூங்கா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பெண்கள் விரும்புவது எது ? ஒரு காலத்தில் ஆங்கில காட்டில் ஆர்தர் என்னும் பெயருடைய கீர்த்திமிகுந்த அரசர்ஆண்டுகொண்டிருந்தார். அக்காலத்தில் இப்பொழுது போல் அரசாங்க முறை நடை பெறவில்லை. நாடு முழுவதும் அரசர் ஆணை பரவி யிருக்க வில்லை. அக்கிரமங்கள் மலிந்திருந்தன. அங்கங்கே உடல் வலிமை மிகுந்த பிரபுக்கள் பலர் அக்கம் பக்கத்திலுள்ள ஏழை மக்களைக் கொள்ளையடித்தும், அவர்களுடையபெண் களைத் தூக்கிச் சென்றும் இன்னும் பல அட்டுழியங்கள் செய்தும் வந்தனர். மக்களுக்கு வீட்டில் வசிக்க அச்சம்: பாதைகளில் கடக்கப் பயம்; எப்பொழுதும் மனத்தில் திகில். சிஷ்ட பரிபாலனம், துஷ்ட கிக்கிரகம் அல்லவோ அர சர் கடமை ஆனல் எந்த அரசலுைம் இந்தக் கொடுமை களே ஒழிக்க இயலவில்லை. அப்பொழுது ஆண்டவன் அனுப்பியது போல் ஆர்தர் அரசர் வந்தார். அவர் அரியாச னத்தில் அமர்ந்ததும் இஷ்டம் போல் இன்னல் விளைத்து வந்த துஷ்டர்களே அடக்கி ஏழைகளைக் காக்க உறுதி செய்து கொண்டார். சாந்தியும் சமாதானமும் நிலவச் செய்வதே தமது முதற் கடமையாக எண்ணினர். —115–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/117&oldid=759309" இலிருந்து மீள்விக்கப்பட்டது