பக்கம்:எனது பூங்கா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? கொடுக்க மன்னர் இல்லையோ?” என்று கதறி அழுது கொண்டு ஒரு பெண் அரசவை மண்டபத்திற்குள் நுழைங் தாள். மன்னர் விஷயத்தை விசாரித்தார். 'நானும் என் கணவரும் ஒர் ஊருக்குப் போய்க்கொண் டிருந்தோம். வழியில் ஒரு கோட்டையிலிருந்து ஒரு முர டன் வந்து என் கணவரை இழுத்துப் போன்ை. நான் அழுது இரங்கினேன். ஆனல் அந்தப் பாதகன் மனம் இள கவில்லை. 'ஏழைகளைக் காக்கிருராமே ஆர்தர் இறை வர், அவரிடம் போய்ச் சொல். உன் கணவனே மீட்க முடி யுமானுல் மீட்கட்டும் ' என்று கூறி, என்னே வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டு விட்டான். ஐயோ, எம்பெரு மானே! எனக்கு அருள் செய்ய மாட்டீரா? என்று விம்மி விம்மி அழுது கொண்டே அந்தப் பெண் கூறிள்ை. அரசர் மனத்தில் பெண்ணின் துயரம் கண்டு வருத்த மும், அக்கிரமச் செயல் கண்டு கோபமும் பொங்கி எழுங் தன. அந்தப் பெண்ணிடம், அம்மா, வருந்தாதே. இதோ நானே சென்று உன் கணவனே மீட்டு வருகிறேன். இங் கேயே என் அரசியுடன் இரு என்று ஆறுதல் கூறி உடனே அந்த அரக்கனை அழித்துவரத் தன்னந்தனியாகக் குதிரையில் ஏறிப் புறப்பட்டு விட்டார். காடு வனந்தரங் கள் கடந்து பெண் சொன்ன கோட்டை அருகில் வந்து சேர்ந்தார். அங்கு வந்ததும், அடே அரக்கா, யாரடா இங்கே 2 வெளியே வா? உன்னை விரைவில் எமனுலகம் அனுப்பட் டும், என்று இடி இடிப்பதுபோல் முழங்கினர். உண்மை —117–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/119&oldid=759311" இலிருந்து மீள்விக்கப்பட்டது