பக்கம்:எனது பூங்கா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? _ போய்த் தம் உயிரை அவ்னிடம் ஒப்புவிக்க வேண்டியதே. ஒன்றும் தோன்ருதவராய், கவலை நிறைந்தவராய் உள் ளம் சோர்ந்தவராய், எமலோகம் செல்பவராய் அவர் தம் குதிரையில் ஏறி அரக்கன் உறைவிடம் நோக்கி மெது வாய்ப் போய்க் கொண்ாாந்தார். காட்டு வழியாகப் போக நேர்ந்தது. அங்கே ஒரு பாறையின் மேல்|ஒரு கிழவி உட்கார்ந்திருந்தாள். தொங்கு சதை, திரைத்த உடல், கூனிய முதுகு, குழிந்த கண்கள், முதிர்ந்த முதுமை, விகார ரூபம் ! அவள் சிரித்துக் கொண்டே, 'ஐயா, ஆர்தரே பெண்கள் விரும்புவது எது என்று தெரிய வேண்டுமா ? வாரும் இங்கே சொல்லு கிறேன் ! என்று கூறிக் கூப்பிட்டாள். ஆர்தர் நிமிர்ந்து பார்த்தார். பெயர் சொல்லி அழைக்கிருள். நம் நோக்கத் தையும் அறிந்க விட்டாள். இவள் ஒரு மந்திரவாதியோ? என்று எண்.ை ர்ை. ஆலுைம் கேட்போம், என்ன சொல் லுகிருள் என்று பார்ப்போம் என்று அவள் அருகில் போனர். " சரி, விடை கூறினல் என்ன வெகுமதி அளிப்பீர்? உம்முடைய அரச சபையிலுள்ள அழகிய வீரர்களில் ஒரு வர்க்கு என்னை மணஞ்செய்து தருவதாக வாக்களித்தால் உமக்கு விடை கற்றுக் கொடுக்கிறேன்' என்று அவள் பொக்கை வாயால் கூறிள்ை. இவளையாவது, இளம் வீரருக்கு மணம் செய்து தருவ தாவது இது இயலக்கூடிய காரியமா? ஆனல் விடை தெரி யாவிடில் இன்னும் ஒரு நாளில் உயிர் இழக்க வேண்டுமே அதனுல் முன் பின் யோசியாமல் ஆர்தர், 'அப்படியே செய் —120–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/122&oldid=759315" இலிருந்து மீள்விக்கப்பட்டது