பக்கம்:எனது பூங்கா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சிறியது எது? நாம் உலகத்தில் சில பொருள்களைச் சிறியன என்றும் சில பொருள்களைப்பெரியன என்றும் கூறுகின்ருேம். அத்து டன் சில பொருள்களைச் சிறியன என்று எண்ணி அலட்சியம் செய்யவும் செய்கின்ருேம். ஆனல் அப்படிச் செய்யலாமா ? அலட்சியம் செய்யக்கூடிய அளவு சிறிய தாக உள்ளது ஏதேனும் உண்டா : விஞ்ஞான சாஸ்திரங்களுக்கெல்லாம் அஸ்திவாரமாக இருப்பது கணிதம் அதில், ஒன்றுதான் சகல எண்களிலும் சிறியதாகும். அதைவிடச் சிறியது கிடையாது. அது கூட இல்லாத ஒரு எண் உண்டு. அதைப் பூஜ்யம் என்று கூறு வோம். ஆனல் அந்த ஒன்றும் பூஜ்யமும் தாம் சிற்கும் இடத்தைப் பொறுத்துச் சிறியதாகவும் ஆகிவிடுகின்றன. பெரியதாகவும் ஆகிவிடுகின்றன. ஒன்று என்பது ஒன்று தான். ஆனல் அதை அடுத்து ஒரு பூஜ்யத்தைச் சேர்த்து விட்டால் உடனே அந்த ஒன்றுடன் ஒன்பது சேர்ந்து பத்து ஆகிவிடுகிறது. அதை அடுத்து மற்ருெரு பூஜ்யத் தைச் சேர்த்தால் உடனே ஒரு ஒன்பதன்று. பத்து ஒன்பது வந்து சேர்ந்து கொள்கின்றன. நாகப் பெருகிவிடு கிறது. —134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/126&oldid=759319" இலிருந்து மீள்விக்கப்பட்டது