பக்கம்:எனது பூங்கா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறியது எது ? எண்களேவிட்டுப் பொருள்களைக் கவனித்தால் அண்டம் தான் பெரியது.அணுவைத்தான் சிறியது என்று கூறுவார். ஆல்ை அவ்வளவு பெரிய அண்டத்தையும் அலுைவைக் கொண்டு அழித்துவிடலாம். அவ்வளவு ஆற்றல் உடையது அணு என்பதை 1945-ம் ஆண்டு கண் கூடாக ஜப்பான் தேசத்தில் கண்டோம். -- ஆனல் அணுவை காம் கண்ணுல் பார்த்ததில்லை. சாதாரண மக்களுக்கு ஆதைக்கொண்டு எதுவும் செய்யத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த பெரிய பொருள்களில் ஒன்று நம்முடைய திருவிழாக்களில் ஊர்வலம் வரும் தேராகும். அந்தத் தேரின் அச்சாணியைப் பார்த்தால் அது ஒரு முழங்ளமுள்ள சிறு கம்பிதான். ஆனல் அந்த அச்சாணி இல்லையானுல் தேரின் கதி என்ன ? அது ஒடுமா ? சாய்ந்து தான் போகும். அச்சாணிகூட ஒரு பெரிய பொருள்தான். சாதாரண மாக நாம் அற்பம் என்பதைக் குறிக்க உபயோகிக்கும் தூசி எவ்வளவு சிறியது? அது நம்முடைய கண்ணில் விழுந்து விட்டால் நம்மை அது என்ன பாடுபடுத்திவிடு கிறது? இவை எல்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். உயிருள்ள வைகளில் தரையில் சஞ்சரிக்கும் யானையும் தண்ணிரில் வசிக்கும் திமிங்கிலமுமே பெரியன. யானே மரங்களே முறித்துச் சாய்த்து விடும் ஆற்றல் உடையது. திமிங்கிலம் கப்பல அடித்துத் தாழ்த்திவிடக்கூடிய பலம்பொருந்தியது. ஆல்ை ஜீவராசிகளில் மிகச் சிறியவை கிருமிகள் என்று —1525–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/127&oldid=759320" இலிருந்து மீள்விக்கப்பட்டது