பக்கம்:எனது பூங்கா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

 நாம் ஒரு வீட்டிற்குப் போகிறோம். அங்கே மகாத்மா காந்தியின் படத்தைப் பார்க்கிரறோம். அது அழகாக இருக் கிறது. உடனே அந்த வீட்டாரிடம் அத்தகைய படம் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்கிரறோம். விசாரித்து அத்தகைய படம் ஒன்றை வாங்கிக்கொண்டுவந்து நம் முடைய வீட்டில் மாட்டுகிரறோம். அவ்வளவுதான். அதன் பிறகு அதைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. ஒருவேளை யாரேனும் நம்முடைய வீட்டுக்கு வருபவர் 'இந்தப் படம் அழகாயிருக்கிறதே' என்று கூறினால் 'ஆமாம் இன்ன இடத்தில் இவ்வளவு சிரமப்பட்டு வாங்கி வந்தேன்' என்று கூறி மகிழ்கிரறோம். ஆனால், இந்த மகிழ்ச்சி படத்தின் அழகால் ஏற்பட்டதன்று, இத்தகைய படத்துக்குச் சொந் தக்காரன் ஆகிவிட்டோம் என்ற எண்ணத்தால் ஏற்பட் டதேயாகும். இதுபோலத்தான் பூங்காவை உடையவர் களும் நடந்துகொள்வார்கள். வீட்டின் முன்பக்கம் எத் தனையோ அழகான பூச்செடிகளை வைத்து வளர்க்கிறார்கள். ஆனால் அவைகளைப் பார்த்து மகிழ அவர்களுக்கு எண்ண முண்டோ இல்லையோ. நேரம் கிடையவே கிடையாது. அதைப் பார்த்து மகிழ்பவர்கள் எல்லாம் வீதியில் போகும் நாம்தான். அதனால்தான் செடிகள் அவர்களுடையவை; அவற்றின் அழகு நம்முடையது என்று கூறினேன்.
 ஆகவே பூங்காவனங்கள் ஏற்பட்டது உரிமை கொண் டாடுவதற்காகவன்று. அழகு அனுபவத்துக்காகவேயாகும். அழகு என்பது அதை அனுபவிப்பவர்க்கே சொந்தம். அந்த முறையில் நான் எந்தப் பூங்காவனங்களைக் கண்டு என் இதயத்தைப் பறிகொடுக்கிறேனோ அந்தப் பூங்கா வனங்கள் எல்லாம் என்னுடையனவே.

— О —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/13&oldid=1298957" இலிருந்து மீள்விக்கப்பட்டது