பக்கம்:எனது பூங்கா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா ! என்று முடிவு கட்டுகின்ருர், ஆகவே அழகில் ஈடுபடும் கவி ஞர்கள் பெண்ணேயே அழகு என்று ஏகமனதாகக் கூறுகி ருர்கள். + ஆலுைம் எனக்குச் சந்தேகம் தீர்த்தபாடில்லே. ஆண் பெண்ணைப் பார்க்கும்பொழுதும், பெண் ஆணைப் பார்க் கும்பொழுதும் உணர்ச்சி உண்டாகின்றது. உணர்ச்சி வயப்பட்டால் உண்மையைக் காண முடியாது. அனுமன் தான் ராமனே வர்ணிக்கின்றன். ஆயினும் அவனும்பக்தி என்னும் உணர்ச்சி ததும்பி நிற்பவனுகவே காணப்படுகின்ருன். அதனுல் உணர்ச்சியை விட்டுவிட்டுக் காய்தல் உவத்தல் அகற்றி ஆராய்ந்தாலே உண்மை விளங்கும். நாம் இயற்கைக் காட்சிகளே அனுபவிக்கிருேம். அப் பொழுது அவற்றின் அழகில்மட்டும் ஈடுபட்டிருக்கிருேமே யன்றி நமக்கு அப்பொழுது வேறு எவ்விதமான உணர்ச் சியும் கிடை யாது. அப்பொழுது எது அழகாயிருக்குமோ அதைத்தான் அழகானது என்று கூறுவோம். பிற உணர்ச் சிகள் ஏற்பட்டால்தான் கம்முடைய அழகுணர்ச்சி மழுங் கிப் போகும். அப்பொழுது அழகில்லாததையும் அழகா னதாகச் சொல்ல ஆரம்பித்து விடுவோம். சோழிகளைப் பாருங்கள். அவற்றில் சேவல் அழகா? பெட்டைக் கோழி அழகா முட்டை விற்பனையில் ஆசை யிருந்தால்தான் பெட்டைக்கோழியை விரும்புவோமேயன்றி அழகை மட்டும்.அதுபவிக்க விரும்பில்ை, சேவலைத்தான் பார்ப்போம் அதைத்தான் அழகு என்று கூறுவோம். —13.6—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/138&oldid=759332" இலிருந்து மீள்விக்கப்பட்டது