பக்கம்:எனது பூங்கா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.எனது கார்

 நான் சொல்லப்போகும் கார் தமிழ்ச்சொல் அன்று. அதiqல் நான் கார் என்றவுடன் மேலே விண்ணில் மேகத் தைப் பார்க்கவேண்டாம். அல்லது கண்களை மூடிக் கொண்டு இருள் என்று எண்ணிவிடவேண்டாம். இக் காலத்தில் சாதாரணமாக மக்கள் கார் என்னும் மொழியை எந்தப் பொருளில் உபயோகிக்கிuqர்களோ அதே பொருளில் தான் கானும் உபயோகிக்கிறேன். எனது கார் என்பது எனது மோட்டார்கார்தான்.
 என்னிடம் மோட்டார்கார் ஏதும் இருக்குமா என்று திகைக்கவேண்டாம். 'போர்டு', 'ஷெவ்ரோலட்' போன்ற கார் வாங்க என்னிடம் பணம் கிடையாது. ஆனால் என் கார் இவைகளைப் போன்றதன்று. இவைகளைவிட ஏற்ற முடையதாகும். அம்மட்டோ ? மோட்டார் கார்களில் தலைசிறந்தது 'ரோல்ஸ்ராய்ஸ் என்பர். அதைப்பார்க் கிலும் ஆயிரமடங்கு உயர்ந்ததாகும் எனது கார்.
 ஆயிரமடங்கு என்று கூறயதுகூடத் தவறுதான். என் காரின் மேன்மையை யாராலும் அளவிட இயலாது. அது வெகு அற்புதமானது-வெகு அழகானது. சாதாரணக்

—15–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/14&oldid=1298970" இலிருந்து மீள்விக்கப்பட்டது